பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 37 (8) யாழ் முறிபாடியது: பல தலங்களையும் சேவித்துக் கொண்டு திருநீலகண்டத்துப் பாணனார் தம் அன்னையார் பிறந்த ஊராகிய திருத்தருமபுரத்தை" அடைகின்றார். பாணருடைய வேண்டுகோட்கிணங்கியே இத்தலத்துக்கு வருகின்றார் பிள்ளையார். யாழ்ப்பாணருடைய உறவினர்கள் சம்பந்தரை எதிர்கொண்டு போற்றுகின்றனர். பெரும்பாணரும் தாம் பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகங்களை யாழில் வாசிக்கும் பேறு பெற்றமையைத் தம் சுற்றத்தாருக்கு எடுத்துரைக்கின்றார். தம் உறவினர்கள்தாம் பெற்ற பேற்றினைக் கண்டு மகிழ்வார்கள் என்றுதான் இவ்வாறு தெரிவித்தார். இதனைக் கேட்ட பாணரின் சுற்றத்தார்கள் 'நீவிர் திருப்பதிகத்தை யாழிலிட்டு வாசிப்பதால் தான் அதன் இசை யாண்டும் பரவுவதாயிற்று' என்று பாணரை நோக்கி முகமன் உரைக்கின்றனர். உண்மையில், பாணர் குலத் தவர்கள் தமது இசைமரபைப்பற்றிப் பெருமை கொள்பவர்கள். இசைவாணர்கள் - ஏன்? எல்லாக் கலைஞர்களுமே தம் மரபைப் பற்றிப் பெருமை கொள்பவர்கள். நாதஸ்வரக் கலைஞர்கள் தம் மரபில் உள்ளவர்களால்தான் கர்நாடக சங்கீதம் வழிவழியாக மரபு கெடாமல் காப்பாற்றப்படுகின்றது என்ற கருத்தினைக் கொண்டிருப்பதைப் பார்க்க வில்லையா? தம் உறவினர்கள் கூறியதைக் கேட்ட பெரும்பாணர் அதிர்ச்சி யடைகின்றார். இறையருளால் பெறற்கரிய இசை ஞானத்தைப் பெற்ற பிள்ளையாரின் பாடல்கள் கேவலம் தம் யாழின் மூலமாகப் பெருமையடைந்தன என்ற சொற்களை உண்மைத் தொண்டராகிய அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஞானசம்பந்தரைப் பணிந்து திருப்பதிகத்தின் இசை அளவிலடங்காத் தன்மைய தென்பதனைத் தம் சுற்றத்தாரும் பிறரும் அறிந்து கொள்ளும்படிப் பாடியருளுமாறு வேண்டுகின்றார். அவரது வேண்டுகோட்கிணங்க 21. திருத்தருமபுரம்: காரைக்காலிலிருந்து ஒருகல் தொலைவு. சம்பந்தர் யாழ்முரிபாடிய அற்புதத்தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.