பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மூவர் தேவாரம் - புதிய பார்வை விளரிள முலையவர்க் கருள் நல்கி வெண்ணிறணிந்தோர் சென்னியின் வளரிள மதியமோ டிவராணி வாய்மூரடிகள் வருவாரே (1) என்பது இதன் முதற்பாடல். இப் பதிகத்துப் பாடல் தோறும் நண்ப ராகிய அப்பரடிகளை இவர் எனச் சுட்டிக்காட்டி "இவரை ஆட் கொள்ளும் நீர்மையையுடைய திருவாய்மூர் இறைவன் இதோ வருகின்றார்' என்ற பொருளமைய 'இவர் ஆளநீர் வாய்மூரடிகள் வருவாரே' எனப் பிள்ளையார் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை கருதத் தக்கது. இதனால் பிள்ளையார் வாய் மூரடிகள் தமக்குக் காட்டிய ஆடற்கோலத்தை நாவுக்கரசர்க்குக் காட்டிய செய்தி நன்கு புலனாதல் காணலாம். இரு பெருமக்களும் திருவாய்மூரில் சில நாட்கள் தங்கிப் பெருமானைப் போற்றி மீண்டும் திருமறைக் காட்டினை அடைந்து திருமடத்தில் அமர் கின்றனர். (11) வாசிதீரக் காசு பெறுதல்: சண்பை வேந்தரும் சொல் வேந்தரும் சேர்ந்து பல தலங்களை வழிபட்டபின்திருவிழிமிழலை” என்ற திருத்தலத்தில் தங்குகின்றனர். நாடோறும் இருவரும் தொண்டர்களுடன் தலத்துப் பெருமானை வழிபடும் நியதியை மேற் கொண்டுள்ளனர். இக்காலத்தில் பல திருப்பதிகளைப் பாடி மிழலை மேவிய பெருமானையும் போற்றுகின்றனர். இருபெருங் குரவர்களும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் மழையின்மையால் பஞ்சம் நேரிடுகின்றது. உயிர்க ளெல்லாம் பசியால் வருத்தமுறுகின்றன. சிவனடியார்களை 30. விழிமிழலை. மாயூரம் - காரைக்குடி இருப்பூர்தி வழியில் உள்ள பூந் தோட்டம் நிலையத்திலிருந்து 7 கல் தொலைவு, சக்கராயுதம் பெறுவதற் காகத் திருமால் நாடோறும் இத்தலத்திறைவனை 1000 தாமரை மலர்களைக் கொண்டு அருச்சித்தவர், ஒரு நாள் ஒரு ம்லர் குறையத் தனது கண்ணையே எடுத்து அருச்சனையை முடித்துக் கொண்டதாக வரலாறு. அப்பரும் சம்பந்தரும் வாசி தீரக் காசு பெற்ற தலம்.