பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-5 திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 47 மட்டிலும் இப்பசிவிட்டிடுமா? சிவனடியார்கள் அல்லல்படும் நிலையை சம்பந்தரும் நாவரசரும் கண்டு 'கண்ணுதலோன் திருநீற்றுச் சார்வினோர் கடுங் கவலை வருமா?' என்று சிந்தித்து சிவபெருமானின் திருக்கழல்களை நினைந்த வண்ணம் துயில்கின் றனர். இந்நிலையில் விழிமிழலைப் பெருமான் அவர்கள் கனவில் தோன்றி. 'நீங்கள் கால நிலைமையால் மனத்தில் வாட்டம் அடைந்துள்ளீர். ஆயினும் உங்களை வழிபடும் அடியார்களின் துயரினை நீக்கும் பொருட்டு இப்பஞ்சம் நீங்கும் அளவும் நாம் நாள்தோறும் இத்திருக்கோயிலின் கிழக்குப் பீடத்திலும் மேற்குப் பீடத்திலும் ஒவ்வொரு பொற்காசு நுமக்குத் தருகின்றோம்! பஞ்சம் நீங்கியபின் அக்காக நுமக்குக் கிடைக்காது' என்று சொல்லி மறைந்தருள்கின்றார். ஆளுடையபிள்ளையார் துயில் உணர்ந்தெழுந்து இறைவன் அருளைப் போற்றித் திருநாவுக்கரச ருடன் திருக்கோயிலிற் புகுந்தபோது கிழக்குப் பீடத்தில் பொற் காசு இருத்தலைக் காண்கின்றார். வியப்படைந்து திருவருளைத் தொழுகின்றார். அக்காசினை எடுத்துக் கொண்டு 'இறைவனடி யாரானார் யாவரும் வந்து உண்பார்களாக' என்று இரண்டு வேளைகளிலும் பறை சாற்றி அறிவிக்கின்றார். அங்ங்னமே அவர் திருமடத்தில் வரும் அடியார் அனைவருக்கும் திருவமுது அளிக்கப் பெறுகின்றது. நாவுக்கரசரும் மேற்குப் பீடத்தில் வைக்கப் பெறும் காசினை எடுத்து அவ்வாறே சிவனடியார் கட்கும் நாடோறும் திருவமுது அளித்து வருகின்றார். இவ்வாறு அமுது அளித்து வருங்கால் சம்பந்தர் மடத்தில் அடியார்கள் திருவமுது செய்தற்குக் காலம் தாழ்க்கின்றது. அஃதுணர்ந்த சண்பை வேந்தர் அமுதளிப்பதற்குத் தம்மிடத்தில் காலந் தாழ்பதற்குரிய காரணம் என்னவெனக் கேட்கின்றார். திருவமுது ஆக்குவோர் பிள்ளையாரைப் பணிந்து தாங்கள் இறைவன்பாற் பெறும் படிக்காசைப் பெற்றுப் பண்டம் வாங்கு வதற்குக்கொண்டுசென்றால் அதற்குவட்டம் கேட்கின்றனர் என்றும், நாவுக்கரசர் பெற்ற காசை வட்டமின்றி ஏற்றுக் கொள்கின்றனர்