பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மூவர் தேவாரம் - புதிய பார்வை என்றும் கூறி, இதுவே காலம் தாழ்த்தற்குரிய காரணம் எனத் தெரிவிக்கின்றனர். இதனையுணர்ந்த பிள்ளையார் 'அப்பர் பெருமான் கைத் தொண்டு செய்தலால் அவர் பெறும் படிக்காசு வட்டமின்றி ஏற்றுக் கொள்ளப் பெறுகின்றது' எனச் சிந்தித்து அறிகின்றார். 'இனி வரும் நாட்களில் தரும் காசு வாசி தீரும்படி இறைவனைப் பாடிப் போற்றுவேன்' என்று திருவுளம் கொள்ளு கின்றார். மறுநாட் காலையில் விழிமிழலையில் இறைவனைப் பணிந்து 'வாசி தீரவே" (1.92) என்று பதிகம் பாடிப் போற்று கின்றார். இதில் 'வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச் லில்லையே” என்பது முதற்பாடல். இதனால் வாசியில்லாத நல்ல காசு இவருக்கும் கிடைக்கின்றது. பண்டம் வாங்குவதற்குச் சென்று கொடுத்தபோது வணிகர்கள், இக்காசு மிகவும் நன்று வேண்டுவனத் தருவோம்' என்று கூறி உணவுப் பொருள்களை வழங்குகின்றனர். அன்று முதல் பிள்ளையார் திருமடத்திலும் அடியார்கள் உரிய காலத்தில் திருவமுது செய்கின்றனர். இங்ங்ணம் இருவருடைய திருமடங்களிலும் எண்ணிறந்த சிவனடியார்கள் திருவமுது செய்து மகிழ்ந்துறையும் காலத்தில் எங்கும் மழை பெய்து வேளாண்மை செழிக்கின்றது. நெல் முதலிய தானியங்கள் நிறைய விளைகின்றன. உயிர்களெல்லாம் துன்பம் நீங்கி இன்புறுகின்றன. நம்பியாரூரர் : சில ஆண்டுகட்குப் பின்னர் - இவர்கள் இருவரும் சிவப்பேறு அடைந்த பிறகு நம்பியாரூரர் இத்தலத் திற்கு வருகின்றார். சீகாழிப்பதியில் உமையம்மையுடன் தோணிமீது வீற்றிருந்தருளும் பெருமானைக் காண விரும்பிய பிள்ளையாரைக் கழுமலநகருக்குப் போக விடாமல் தோணிபுரத் திருக்கோலத்தை விழிமிழலை விண்ணிலி விமானத்திலேயே காட்டியருளிப் பிள்ளையாரையும் நாவின் வேந்தரையும் வீழிமிழலையிலேயே