பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 49 தங்கப் பணித்ததும், பஞ்சம் வந்த பொழுது அவ்விரு பெரு மக்களுக்கும் நாடோறும் ஒவ்வொரு படிக்காக நல்கியருளி சிவனடியார்கட்கு உணவு கிடைக்கச் செய்ததுமான விழிமிழலை நாதனின் பேரருட் செயலைக் கேட்டு மகிழ்கின்றார். 'விழிமிழலை நாதனே, நல்லிசை ஞானசம்பந்தரும் நாவினுக்கரையரும் பாடிய தேனொழுகும் தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் விருப்பால் அவர்கட்குப் படிக் காசு தந்தருளினீர். அவர்கள் பாடியருளிய தமிழ் மாலைகளைச் சொல்லிலேத்தும் தொண்டினை மேற் கொண்டவன் அடியேன். ஆகையால் அடியேனுக்கும் அருளுதல் வேண்டும்' என்று வேண்டும் முறையில், பரந்த பாரிட மூரிடைப் பலிபற்றிப் பார்த்துணும் சுற்ற மாயினி தெரிந்த நான்மறை யோர்க்கிட மாய திருமிழலை இருந்துநீர் தமிழோ டிசைகேட்கும் இச்சையால் காசுநித்தம் நல்கினி அருந்தண் வீழி கொண்டீர் அடியோடும் அருளுதிரே." என்று வீழிமிழலைப் பெருமானைப் பாடிப் போற்றியுள்ளதை நாம் நினைந்து பார்க்கின்றோம். (12) மதுரை மாநகர் அற்புதங்கள். பாண்டி நாட்டு அரசன் கூன்.பாண்டின் (நின்றசீர் நெடுமாறன்) சைவ சமயத்தைத் துறந்து சமண சமயத்தைத் தழுவினான். ஆனால் அரசமாதேவியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் தமக்குரிய சிவநெறியை நெகிழ விடாது கனம் பிடித்து வருகின்றனர். இந்த இருவரும் சம்பந்தப் பெருமான் திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதைச் செவியுற்று பிள்ளையாரை வணங்கி வரும்படியும் தம் நாட்டின் சமய 30. சுந்தரர். தேவா. 7:88:8