பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மூவர் தேவாரம் - புதிய பார்வை நிலையைத் தெரிவித்து வரும்படியும் தம் பரிசனங்களை அனுப்பி வைக்கின்றனர். வந்தவர்கள் அவ்வாறே செய்து பாண்டி நாட் டிற்கு எழுந்தருளிச் சிவநெறியைப் பரப்பும் திருநீற்றின் சிறப்பை மக்கள் உணரும்படி செய்யவும் பிள்ளையாரை வேண்டு கின்றனர். பிள்ளையார் அப்பர் பெருமானைத் தனிமையில் அழைத்துச் சென்று மதுரைக்குச் செல்லும் தம் பெருவிருப்பத்தைத் தெரிவிக்க அவர் சமணர்கள் இழைக்கும் கொடுமைகளைக் கூறி அங்கு எழுந்தருள்வது தகாது என்று கூறித் தடுத்தருள்கின்றார். தவிர, ஞாயிறு முதலிய கோள் நிலைகளும் அச்சமயம் சரியாக இல்லை என்றும் குறிப்பிடுகின்றார். இதனைச் செவி மடுத்த பிள்ளையார், 'நாம் போற்றுவன கயிலைநாதன் திருவடிகளாதலால் நம்பால் எத்தகைய தீங்கும் நேரிடாது' என்று வற்புறுத்துமுகமாக' வேயுறு தோளி பங்கன் (2.85) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் அருளிச் செய்கின்றார். வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன்வெள்ளி சனிபாம் பிரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. (1) என்பது இப்பதிகத்தின் முதற்பாடல். 'கோளும் நாளும் தீயவை யேனும் இறைவன் அடியார்களுக்கு நன்றாம்' எனக் கூறியருளு கின்றார். இத்திருப்பதிகம் முழுவதையும் செவிமடுத்து மகிழ்ந்தே அப்பர் பெருமான், மதுரைப் பயணத்திற்கு உடன்படுகின்றார், தாமும் அவருடன் புறப்படத் துணிகின்றார். இதனையுணர்ந்த 31. பெரி.புரா ஞானசம்பந்த புரா:615.616