பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 53 பாண்டிமாதேவியின் மங்கலநாணைப் பாதுகாத்தற் பொருட்டும், அமைச்சர் குலச்சிறையார் மன்னன்பால் வைத்த அன்பினைக் கருதியும், பாண்டியன்பால் அபராதம் உறுதலை எண்ணியும், அவன் திரும்பவும் சிவநெறியில் சேர்தற்குரிய நற் பேற்றினை நினைந்தும் பிள்ளையார் தீப்பிணியைப் 'பையவே செய்க" எனப் பணிந்தருளினதாகக் கூறுவர். சேக்கிழார் பெருமான்.” நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி யாதலாலும், அவர்கள் கருதிய வண்ணம் நன்மையும் தீமையும் தரவல்ல தாதலாலும், மறைமுனிவராகிய பிள்ளையார் பையவே சென்று பாண்டியற் காகவே' என்று திருப்பதிகத்தில் பணித்தவாறு விரிந்த வெந்தழல் வெம்மை போய்த் தென்னனை மெல்லத் தீ வெப்பு நோயாக மாறுகின்றது. பல்வேறு சிகிச்சைகள்: பொழுது புலர்ந்ததும் சமணர்களால் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. மருத்து வர்கள் தாம் கற்ற கலைகளால் நோயைத் தணிக்க முயன்றும் பயன் இல்லை. சமணர்கள் கையாண்ட மந்திர தந்திரம் வாதம் முறைகளும் பயன்படாதொழிகின்றன. சமணர்களின் சூழ்ச்சியை அறிந்து கொள்ளுகின்றார் அரசன் இரு திறத்தார்களையும் அவரவர் தெய்வச் சார்பினாலே தீர்க்குமாறும், தான் வஞ்சகம் பேசாமல் நடுவு நிலைமை வகிப்பதாகவும் நல்குகின்றான். இது சமணர்களின் அடிவயிற்றைக் கலக்குகின்றது. இந்நிலையில் காழிப் பிள்ளையார் அங்கு எழுந்தருள்கின்றார். தலைப் பக்கமாக இடம் பெற்றிருந்த அரசன் காட்ட அதில் பிள்ளையார் எழுந்தருள் கின்றார். இதனைக் கண்ணுற்ற சமணர்கள் மேலும் அச்சமுறு கின்றனர். சம்பந்தரைக் காணப் பெற்ற நற்பேற்றினால் நோயின் வருத்தம் சிறிது தணியப் பெறுகின்றது. பாண்டியன் பிள்ளையாரை நோக்கி 'நுமது ஊர் யாது?’ என வினவுகின்றான். அதற்குப் பிள்ளையார், 33. பெ.பு. ஞானசம்ப புரா. 705