பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மூவர் தேவாரம் - புதிய பார்வை பிரமனுர் வேணுபுரம் புகலிவெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங் காதியாய பரமனுர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம்நாம் பரவுமூரே. (1) என வரும் திருப்பதிகம் (2.70) பாடி 'பிரமபுரம் முதலிய பன்னிரண்டு திருப்பெயர்களையுடைய திருக்கழுமலே நாம் கருதும் ஊர்' என மறுமொழி கூறுகின்றார். இப்பன்னிரண்டு பெயர்களும் ஒரு வட்டமாக அமையும்படி அப் பெயர்களை மாற்றினமையால் இது சக்கரமாற்று என்ற திருப்பெயரைப் பெறுகின்றது. சமணர்கள் பிள்ளையாரைச் சூழ்ந்து கொண்டு பலவாறு வெருட்ட, அரசமாதேவி அஞ்ச பிள்ளையார் மானினேர் விழி (3.39) எனத் திருப்பதிகத்தைப் பாடி அவருடைய அச்சத்தைப் போக்குகின்றார். ஒவ்வொரு பாடலிலும் எளியனேன் திருவாலவாய் அரன் நிற்கவ்ே' என்று முடிவதிலிருந்து 'ஆலவாய் அரன்' பிள்ளையார் உள்ளத்தில் நிலை பெற்றிருப்பதை அறியலாம். சமணர்கள் அரசனின் இடப்பாகத்தைப் பொறுப்பேற்று அப்பகுதியை பீலி கொண்டு தடவுகின்றனர். பயன் இல்லை. பிள்ளையார் அவனது வலப்பாகத்தையும் (பின்னர் இடப்பாகத்தையும்) பொறுப்பேற்று ‘மந்திரமாவது நீறு (2.66) என்ற பதிகம் ஒதுகிறார். மந்திர மாவது நீறு, வானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு, தந்திர மாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு, செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே (1)