பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 55 என்பது முதற் பாடல். பாடலைப் பாடிக்கொண்டே அரசன் மேனி யெங்கும் நீறு கொண்டு பூச வெப்பு நோய் முற்றிலும் நீங்கு கின்றது." அமணர்கள் தோற்று அவமானமடைய, பிள்ளையார் வெற்றி வாகை சூடுகின்றார். வெப்பு நீக்க ஆற்றலற்ற அமணர்கள் தருக்க வாதத்தால் வெல்லுதல் அரிது எனத் தெளிந்து நீரிலும் நெருப்பிலும் வெல்வ தாக எண்ணுகின்றனர். 'தருக்கவாதத்தைக் கைவிட்டு காட்சி யளவையால் நிறுவுதல் இயலும், இரு திறத்தாரும் தாம் கண்ட பேருண்மையினை ஏட்டில் எழுதி அதனை நெருப்பிலிட்டால் வேவுறாத ஏட்டினை யுடைய சமயமே மெய்ச் சமயம்' என்கின் றனர். காழிப்பிள்ளையாரும் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொள் கின்றார். (ஆ) அனல் வாதம்: பாண்டியன் தன் பேரவை முன்னர் தீக்குண்டம் அமைக்க ஏற்பாடு செய்கின்றான்: தீ மூட்டப் பெறு கின்றது. பிள்ளையார் தாம் பாடிய திருப்பதிகங்கள் எழுதப்பெற்ற அடங்கன் முறையின்றும் ஒன்றை எடுக்கின்றார். அது “போகமார்த்த பூண் முலையாள் (1.49) என்ற நள்ளாற்றுப்பதிகமாக அமை கின்றது. அதனை எடுத்து 'என்னை ஆளுடைய இறைவனது திருநாமமே என்றும் நிலை பெற்ற மெய்ப் பொருளாகும் என உலகமாந்தர்க்கு அறிவுறுத்தும் நிலையில் இத்திருப்பதிக ஏடு தீயில் வெந்தழியாது நிலைபெறுக' என்று சொல்லித் "தளரிள வளரொளி (3.87) என்ற இன்னொரு நள்ளாற்றுப் பதிகத்தைப் பாடி முன்னை ஏட்டை யாவரும் காணத் தீயிலிடுகின்றார். இந்த ஏடு எரிந்து சாம்பலாகாது பச்சையாய் விளங்குகின்றது. (ஆகவே 'பச்சைப் பதிகம் என்ற திருப்பெயர் பெறுகின்றது). அமணர்கள் இட்டஏடு "பஞ்சு தீயிடைப்பட்டதுபோல்' எரிந்து சாம்பலாகின்றது. 34. 1978 - செப்டம்பரில் அடியேன் மஞ்சட்காமாலையால் தாக்கப்பெற்றேன் (40 நாட்கள்). எந்தச் சிகிச்சையும் பயன்படவில்லை. இப்பதிகத்தைப் பத்து முறை ஓதி உடலில் வெண்ணிறு பூச நோய் 3 நாட்களில் நீங்கியது.