பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 57 இட்டால் உண்மை காண்போம்' என்கின்றனர். இந்நிலையில் பாண்டியன் பிள்ளையாரை நோக்குகின்றான். ஞானக்கன்றும் சைவ சமய உண்மைகளைத் தொகுத்து. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதுஎல் லாஅரன் நாமமே சூழ்க வையக முந்துயர் நீங்கவே (1) என்ற முதற் பாடலையுடைய வாழ்க அந்தணர் (3.54) என்ற திருப்பதிகத்தை ஏட்டில் எழுதித் தமது அற்புதத் திருக்கரத்தால் வைகையாற்றில் இடுகின்றார்." பிறவி என்னும் பேராற்றை அருந்தவர் உள்ளம் எதிர்தது எதிர் செல்வது போன்று அவ்வேடு வைகை வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏகுகின்றது. வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏகுகின்றது. குலச்சிறையார் குதிரை மீதிவர்ந்து வைகையாற்றின்கரை வழியாக அதனைத் தொடர்ந்து செல்லுகின் றார். இப்பாசுரத்தின் இரண்டாம் அடியில் 'வேந்தனும் ஓங்குக' என்று பிள்ளையார் பாடியதனால் முன்னர் கூனனாயிருந்த பாண்டியன் கூன் நீங்கி நின்ற சீர் நெடுமாறன் ஆகின்றான். பிள்ளையார் தம்மால் வைகைக் கரையில் இடப் பெற்ற ஏடு எதிரேறி விரைந்து செல்லக்கண்டவர் 'வன்னியும் அத்தமும்' (3.32) என்ற திருப்பதிகத்தைப்பாடிப் போற்றுகின்றார். வன்னியும் அத்தமும் மதிபொதி சடையினன் பொன்னியல் திருவடி புதுமலரவைகொடு மன்னிய மறையவர் வழிபட அடியவர் இன்னிசை பாடலார் ஏடகத் தொருவனே (1) 35. இப்பாடலின் பொருளைச் சேக்கிழார் பெருமான் சம்பந்தார் புராணத்தின் 822 - 844 பாடல்களில் அற்புதமாக விளக்குவதைப் படித்து இன்புற்று மகிழ வேண்டும்.