பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மூவர் தேவாரம் - புதிய பார்வை என்பது இப்பதிகத்தின் முதற்பாடல். இந்த ஏடு வைகையின் வடகரையில் அமைந்துள்ள ஏடகத்" திருக்கோயிலின் அருகில் தேங்கி நீர் நடுவே வந்து நிற்கின்றது. ஏட்டினைத் தொடர்ந்து சென்ற குலச் சிறையார் குதிரையை விட்டு இறங்கி ஏட்டினை எடுத்துத் தலைமேற் கொண்டு அங்குக்கோயில் கொண்டு எழுந் தருளியுள்ள ஏடகத்திறைவனை இறைஞ்சி விரைந்து மீளுகின் றார். மீண்டவர் பிள்ளையார் பொற்பாதங்களை வணங்கித் தாம் கொணர்ந்த ஏட்டினை நின்ற சீர் நெடுமாறன் முதலிய யாவர்க்கும் காட்டுகின்றார். அங்குள்ளார் அனைவரும் மகிழ்வுற்று இறைவன் திருவருளை வியந்து போற்றுகின்றனர். வைகை யாற்றில் எதிரேறிச் சென்ற ஏடு திருவேடகத் திருக்கோயிலின் பாங்கே ஒதுங்கிய செய்தி மேற் குறிப்பிட்ட வன்னியும் அத்தமும் என்ற பதிகத்தின் திருக்கடைக் காப்பில் ஏடு சென்று அணைதரும் ஏ கத்தொருவனை என வரும் தொடரால் தெளிவாகப் புலனாதல் கண்டு மகிழலாம். முன்னர் ஒப்புக் கொண்டபடி சமணர்கள் கழுவேறுகின்றனர். சேக்கிழார் பெருமானும் 'எண் பெருங்குன்றத்து எண்ணா யிரவரும் ஏறினார்கள்' என்று கூறுவதும் அறியத்தக்கது. பாண்டியனும், பாண்டிமா தேவியும் குலச் சிறையாரும் நாயனார் நிலைக்கு உயர்ந்தனர்." (13) ஆண்பனை பெண்பனையாதல்: நடு நாட்டுத்திருத்தலப் பயணத்தை முடித்துக் கொண்டு தொண்டை 36. ஏடகம் (திருவேடகம்): திண்டுக்கல் - மதுரை இருப்பூர்தி வழியில் சோழ வந்தான் என்ற நிலையத்திலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. ஏடுதங்கிய இடம் "ஏடகம் ஆயிற்றுப் போலும். திருக்கோயில் ஆற்றோரத்தில் உள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். பல ஆண்டுகட்கு முன்னர் பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் இங்கு நிறுவிய கல்லூரி சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது. 37. பெரி.புரா. ஞான சம்பந்த புரா.855 38. பெரியபுராணம் காண்க