பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 59 நாட்டுக்கு வருகின்றார். முதலில் திருவோத்தூர்” என்ற தலத் திற்கு வருகின்றார். இத்தலத்து இறைவனை 'பூத்தேர்ந்தாயன (1.54) என்ற பதிகம் பாடி இறைவனை வழிபட்டு அவ்வூரில் தங்கியிருந்தபொழுது சிவனடியார் ஒருவர் காழிவேந்தரை வணங்கி நின்று, 'எளியேன் இறைவனுக்கு அடிமைத் தொண்டன். சிவனடியார்க்கெனத் தண்ணீர் இறைத்து வளர்த்த பனைகள் ஒன்றேனும் காய்த்திலது. இதனையறிந்த சமணர்கள் இப்பனை களைச் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா? என வினவி அடியேனை இகழ்கின்றனர்' என முறையிடுகின்றார். இது கேட்ட பிள்ளையார் திருக்கோயிலினுட் சென்று கீழ்க் குறிப்பிட்ட திருப்பதிகத்தைப் பாடி அதன் திருக்கடைக் காப்பில், குரும்பை யாண்பனை யீன்குலையோத்துர் அரும்பு கொன்றை அடிகளைப் பெரும்புகலி யுள்ஞான சம்பந்தன்சொல் விரும்பு வார்வினை வீடே (11) 59. திருவோத்தூர் (ஒத்தூர்) திருவேதிபுரம்,திருவத்துர் காஞ்சியிலிருந்து 19:கல் தொலைவு. கோயிலின் மேற்கில் சேய்ாறு (செய்யாறு) ஓடுகின்றது. சிவபெருமான் தேவர்கள் முனிவர்கட்கு வேதப் பொருளை ஓதிய தலம் (ஒத்து - வேதம்) சம்பந்தர் அடியார் வேண்டு கோட்கிணங்கி ஆண் பனை களைப் பெண் பனைகளாக்கிய அற்புதத் தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் கொண்டது. நான் திருப்பதியில் பணியாற்றிய போது (1975 என்பதாக நினைவு) செய்யாறு அரசினர் கல்லூரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் க. பெருமாள் கல்லூரியில் ஒரு சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைத்திருந் தார். 'அறிவியல் தமிழ்' என்ற தலைப்பில் பேசியதாக நினைவு. ஒருநாள் காலை என்னையும் டாக்டர் ந. சஞ்சீவியையும் (சொற்பொழிவுக்கு வந்தவர்) திருவோத்துருக்கு அழைத்துச் சென்று வழிபாடு செய்து வைத்தார். ஆண் பனைகளைப் பெண்பனைகளாக்கி அற்புதம் நிகழ்த்திய சம்பந்தப்பெருமானை நினைவு கூரச் செய்தது இன்றும் என் மனத்தில் பகமையாக உள்ளது.