பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 61 ஒரு நாள் பூம்பாவை கன்னிமாடத்தருகேயுள்ள பூஞ்சோலை யில் மலர் கொய்யச் செல்லும் பொழுது மல்லிகைப் பந்தரிலே மறைந்திருந்த பூநாகம் ஒன்று அவளைத் தீண்டுகின்றது. தந்தையார் மருத்துவர் மந்திரவாதிகளைக் கொண்டு மந்திரதந்திரங்களால் சிகிச்சையளித்தும் பயன்படாது விடம் தலைக்கேறி ஆவிசோர்ந்து மரிக்கின்றாள். சிவநேசர் கலக்க முற்றாராயினும் 'இவள் சம்பந்தருக்கு உரியவள் என்று கூறினமையால் இனித் துன்பமுற வேண்டியதில்லை எனத் தெளிந்து ஒருவாறு துன்பம் நீங்கு கின்றார். சம்பந்தர் இவண் போதரும்வரையிலும் தகனஞ்செய்த சாம்பரையும் எலும்பினையும் ஒரு கலையத்திலே இட்டு வைப்பேன் எனத் துணிகின்றார். அக்கலயத்தைப் பூசித்தும் வரு கின்றார். இந்நிலையில் சம்பந்தர் திருவொற்றியூரில் அடியார் களுடன் எழுந்தருளியுள்ளார் என்ற செய்திகேட்டு மகிழ்வுற்று அவரை எதிர்கொண்டழைக்கச் செல்லுகின்றார். சம்பந்தரும் மயிலை நாதனை வணங்கும் விருப்புடையராய்த் திருவொற்றி யூரிலிருந்து புறப்பட்டு எதிரே வந்தருள்கின்றார். சிவநேசரும் சம்பந்தரின் முத்துப்பல்லக்கின் கீழிருந்து வீழ்ந்து வணங்கு கின்றார். ஞான சம்பந்தரும் சிவிகையினின்றும் இறங்கித் தம்மை வணங்கி நிற்கும் சிவ நேசருடைய செயல்களை அடியார்கள் நவிலக் கேட்டு அவருடன் மயிலை வந்து சேர்கின்றார். பிள்ளையார் காபாலீச்சரத்திறைவனை வணங்கிப் புறம் போந்து சிவநேசரை நோக்கி, 'அன்பீர், நும் திருமகளாரின் என்பு நிறைந்தகலையத்தினை உலகறியக் கோயிலின் புற வாயிலில் கொணர்வீராக” எனப் பணிக்கின்றார். உலகோர் காணும் வண்ணம் பிள்ளையாரும் திருக்கோயிலை வந்தடைகின்றார். வந்தவர் இறைவனது திருவருளைச் சிந்தித்து. 'மக்கள் அடைதற் குரிய பயன் சிவனடியார்கட்கு அமுது செய்வித்தலும் இறை வனுடைய திருவுலாப் பொலிவு கண்டு மகிழ்ந்தலுமே என்பது உண்மையானால் பூம்பூவாய் நீ உலகினர்.முன் உயிர்பெற்று