பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


<C oமன பநதாடடம 'ஆடுங்கள் என்று ஆட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகே, ஆடுகளத்தின் தரைத்தகுதியைப் பற்றி முடிவெடுக்கின்ற உரிமை நடுவருக்கு உண்டு. 2. ஆட்டத்தைத் தொடங்குவதற்காக எந்தக் குழு முதலில் அடித்தாடுவது அல்லது தடுத்தாடுவது என்பதைத் தேர்ந்தெடுக்க நாணயம் சுண்டியெறிதலின் (Toss) மூலம் தீர்மானிக்கப்படும். 3. ஒரு போட்டி ஆட்டத்தில் 5 முறை ஆட்டங்கள் (Five innings) இரு குழுக்களும் ஆட வேண்டும். ஒரு முறை ஆட்டம் என்பது, ஒரு தடவை அடித்தாடுவது (Batting). ஒரு முறை தடுத்தாடுவது (Fielding) -geb&gblb. 4. ஒரு போட்டி ஆட்டத்தில் 5 முறை ஆட்டங்களையும் கட்டாயம் ஆடித்தான் ஆக வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில், முதலில் தடுத்தாடி இரண்டாவதாக அடித்தாட வருகின்ற குழுவானது, நான்கு முறை ஆட்டங்களிலும் அதிகமான ஒட்டங்கள் எடுத்திருந்தாலும் அல்லது ஐந்தாவது முறை ஆட்டத்தில் மூன்றாவது ஆட்டக்காரர் ஆட்டமிழப்பதற்கு முன்னும் ஆட்டத்தை ஆடாமல் நிறுத்திவிடலாம். சமநிலை ஆட்டம் 5. 5 முறை ஆட்டங்களையும் ஆடி முடித்த பிறகும் இரு குழுக்களும் வெற்றி தோல்வி காணாது சமநிலையில் இருந்தால், மேலும் அதிகமாகக் கூடுதல் (Additional) முறை ஆட்டங்களைத் தொடர்ந்து ஆட வேண்டும். அதாவது, அந்தக் கூடுதல் முறை ஆட்டம் முடிவடையும்போது, யார் அதிக ஒட்டங்கள் எடுத்திருக்கின்றாரோ, அந்தக்