பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மென் பந்தாட்டத்தின் வரலாறும் வளர்ச்சியும் பந்தாட்டம் வந்த கதை மென் பந்தாட்டம் என்று இந்தப் பந்தாட்டத்தின் மென்மையைக் குறிப்பிடுவதால், வன்பந்தாட்டம் என்று ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு எண்ணத் தோன்றுகின்றதல்லவா! வன் பந்தாட்டம் என்று ஒரு ஆட்டம் இல்லையாயினும், ஒரு பந்தாட்டத்தில் வலிமையும் கடினமும் இருந்தது என்னவோ உண்மைதான். அதனை தளப்பந்தாட்டம் (Base Ball) என்ற பெயரில் ஆடி வந்தனர் அமெரிக்கர்கள். ஆடுகின்ற மைதானத்தின் அளவோ அதிகம். ஆட்டத்தில் பயன்படும் பந்தும் சற்று கனமுள்ளதுதான். அடித்தாடும் மட்டையின் எடையும் அதிகமே. அக்தெறிமுறையும் சற்று வித்தியாசமாய் அமைந்து, சிவளிப்புற ம்ைதான்ங்களிலே பலராலும் விரும்பி A_ப்படுகின்ற ஆட்டமாகவே தளப்பந்தாட்டம்