பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 హ్రీ மென் பந்தாட்டம் அமெரிக்காவிலே தோன்றிய ஆட்டமாக, அதிலும் முழுக்க முழுக்க அமெரிக்கரே ஆடி மகிழ்ந்த ஆட்டமாக விளங்கிய அந்தத் தளப்பந்தாட்டத்தின் வரலாற்றைக் கொஞ்சம் ஆராய்ந்து அறிந்து கொண்டோமானால், நாம் மென் பந்தாட்டம் என்று இதை ஏன் கூறினோம் என்ற விவரம் புரியும். பந்தாட்டம் தோன்றிய சூழ்நிலையும் புரியும். ஆட்டத்தின் பெருமையும் நன்கு புரியும். ஏனென்றால் தளப்பந்தாட்டத்தின் வரலாறும், மென்பந்தாட்டத்தின் பிறப்பும் ஒன்றையொன்றைச் சார்ந்து பிரிக்க முடியாத அளவுக்கு பரிபூரணமாக இணைந்தே இருக்கிறது. அமெரிக்க நாட்டில் புகழ் பெற்று விளங்கும் நியூயார்க் நகரில் உள்ள கூப்பர் டவுனைச் சேர்ந்த ஏப்னர் டபுள் டே (Abner Double Day) என்பவரால்தான், தளப் பந்தாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஏன் அவர் கண்டுபிடித்தார் என்று கூறவில்லை என்றால், அங்கே ஆடப்பட்ட கிழப் பூனை ஆட்டம் (An old Cat), அமெரிக்காவில் வந்து தங்கிய ஆங்கிலேயர்கள் ஆடிய ரவுண்டர்ஸ் கிரிக்கெட் போன்ற ஆட்டங்களைத் தழுவித்தான், அந்த தளப்பந்தாட்டம் தோன்றியது என்ற அபிப்ராயத்தால் தான், ஆராய்ச்சியாளர்கள் அவ்வாறு கூறினர். இனி, தளப்பந்தாட்டம் என்று பெயர் பெற்றிடும் அளவுக்கு அந்த ஆட்டம் வளர்ந்து வந்த வகை யினையும் காண்போம். கிழப் பூனை ஆட்டத்திற்கு வேண்டியது ஒரு ரப்பர் பந்தும், பந்தை அடித்தாடுவதற்கு அகலமான