பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 10 ༦ སྤྱི> மென் பந்தாட்டம் உ) பந்தெறியால் வரும் பந்தை அடிக்க முயலும் பொழுது அது மட்டையில் படாமல், பந்தடிப்பவரின் உடலில் ஏதாவது ஒரு பாகத்தைத் தொட்டுவிடுதல். ஊ) பந்தடிக்காரர் அடித்தாடிய பந்தானது, அவர் பந்தடித்தாடும் கட்டத்திற்குள் இருந்து, இரண்டு அடிகளுக்கான வாய்ப்பில் ஆடுகிற பொழுது, அவரின் உடலில் அல்லது உடமையில்பட்டு (தவறான ஆடுகள) வெளிப்பகுதிக்குச் சென்றுவிட்டால். தண்டனை: பந்து நிலைப்பந்தாகிவிடுகிறது. தள ஒட்டக்காரர்கள் ஒடியிருந்தாலும், மீண்டும் அவர்கள் தங்களது பழைய இடத்திற்கே திரும்பி வந்துவிட வேண்டும். திரும்பி வரும்பொழுது தொடப்பட்டாலும், அவர்கள் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படுவார்கள். 12. பந்து என்று (Ball) அழைக்கப்படும் பொழுது அ. பந்தெறிபவரால் (Pitcher) எறியபப்டுகின்ற பந்தானது அடித்தாடக்கூடிய பகுதிக்குள் போகாமலும், பந்தடித்தாடும் தளத்திற்குப் போவதற்கு முன்னதாகவே தரையைத் தொட்டுவிட்டாலும், அவ்வாறு வருகின்ற பந்தினை பந்தாடித்தாடுபவர் அடித்தாடாமல் இருந்து விடுகிறபொழுது, நடுவர் அதனை 'பந்து (Ball) என்று கணக்கிடுவார். தண்டனை: பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். தள ஒட்டக்காரர்கள் முன்னேறி ஒடிச் சென்று நின்று கொள்ளலாம். ஆனால் அதற்கிடையில் தொடப்பட்டால் ஆட்டமிழந்து விடவும் கூடும். ஆ. ஒவ்வொரு முறையும், விதிகளுக்குப் புறம்பான அமைப்பில் எறியப்படுகின்ற பந்தாக பந்தடித்தாடும் தளம் நோக்கி வந்தால்.