பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


118 အဲ့ခဲ့ေ மென் பந்தாட்டம் பந்தெறிபவர் பந்தெறியக்கூடிய நிலையில் இருந்தாலும், அவர் எறிந்தாடக்கூடிய நிலையில் இல்லையென்றே கருதப்படும். 5. தன் கைகளில் பந்து இல்லாமல், பந்தெறிபவர் பந்தெறியும் கட்டத்தில் அல்லது பந்தெறியும் கட்டத்தின் அருகில் வந்து நிற்கக் கூடாது. 2. பந்தெறிவது எப்படி? 1. தன் உடல் முன்பாக இருகைகளாலும் பிடித்திருக்கும் பந்திலிருந்து ஒரு கையை எடுத்தவுடனே, பந்தெறியும் செயல் தொடங்கிவிடுகிறது. பந்தெறியும்போது, ஒரு காலடி (Step) எடுத்து வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு எடுத்து வைக்கும் காலடியானது, பந்தடித்தாடுபவரை நோக்கி அதாவது முன்புறமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு காலடி எடுத்து வைக்கும் செயலும் பந்தெறியும் செயலும் ஒன்று போலவே (Simultaneous) இருக்க வேண்டும். 3. சரியான பந்தெறி என்று எவ்வாறு அறிவது? (Legal Delivery) கையை கீழ்ப்புறமாகவே முன்னேறி செல்வது Gl um 60 G)G TsirG GEFSörg) (under Hand Motion) பந்தடித்தாடுபவரை நோக்கி எறியப்படுகின்ற பந்தெறி முறையையே சரியான பந்தெறி என்று கூறுகிறோம். 1. பந்தெறிபவரை நோக்கி எறியப்படுகின்ற பந்தானது கையை விட்டு நீங்கிப் போகும் பொழுது - எறிந்த கையும் மணிக்கட்டுப் பகுதியும் முன்புறமாக