பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 121 5. பந்தெறிபவர் கவனத்திற்கு 1. பந்தடித்தாடுபவர் பந்தை அடித்து விடுவதிலிருந்து தடுக்க வேண்டும் என்பதற்காக பந்தெறிபவர் வேண்டுமென்றே பந்தை மெதுவாகப் போடுவதோ (Drop), தரையில் உருட்டுவதோ (Roll), அல்லது தரையில் துள்ளவிடுவதோ (Bounce) கூடாது. 2. ஆட்ட நேரத்தில் எந்த சமயத்திலும் பந்தெறிபவர் தன் பந்தெறியும் கைக்கு அல்லது விரலுக்கு நாடா (Tape) அல்லது வேறு எந்தப் பொருளையோ அதுபோன்று பயன்படுத்தக் கூடாது. அதுபோலவே பந்தின்மேல் நாடாவை ஒட்டவோ, சுற்றி வைக்கவோ கூடாது. 3. நடுவரின் மேற்பார்வையின் கீழ், கையை ஈரப்பசையிலிருந்து போக்கிக்கொள்ள, ரோசின் (Rosin) என்ற பவுடரை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். 4. கையிலே கங்கணம் கட்டியிருப்பதுபோல, பந்தெறிபவர் தனது பந்தெறியும் முன் கையில் வியர்வையைத் தடுக்கும் கட்டோ (Sweat Band) அல்லது காப்பு போன்ற பொருளையோ அல்லது அதுபோன்ற அமைப்புள்ள வேறு எவற்றையும் அணிந்து கொள்ளக் கூடாது. தவறும் தண்டனையும் மேலே கூறியவற்றில் ஏதேனும் ஒரு தவறினைப் பந்தெறிபவர் இழைத்துவிட்டாலும், அது முறையிலா பந்தெறி (Illegal Pitch) என்றே குற்றம் சாட்டப்படும். உடனே பந்து நிலைப்பந்தாகிவிடும். பந்தடித்தாடு பவருக்கு ஒரு பந்து (Ball) என்று கணக்கிடப்படும். தள ஒட்டக்காரர்கள் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு