பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 123 அது முறையான பந்தெறி இல்லை என்று நடுவர் அறிவித்துவிடுவார். தண்டனை: இதுபோன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், பந்து நிலைப்பந்தாகிவிடுகிறது. முறையில்லா பந்தெறியைத் தொடர்ந்து நடக்கின்ற மற்ற செயல்கள் எல்லாம் நிராகரிக்கப்படும் (Cancelled). 7. ஒவ்வொரு முறை ஆட்டத் தொடக்கத்திலும் 1. ஒவவொரு முறை ஆட்டம்' (Inning) தொடங்குகின்ற போதும், அல்லது ஒரு பந்தெறியாளரை (Pitcher) மற்றொருவர் பந்தெறியாளராக வந்து மாற்றி ஆடுகின்றபோதும், தன்னுடைய குழு ஆட்டக்காரர் களுக்கிடையே அல்லது பந்தைப் பிடிப்பவருக்கிடையே 5 முறை பந்தை எறிந்து வழங்கி ஆடுகின்ற பயிற்சி ஆட்டத்தை 1 நிமிடத்திற்குள்ளாக ஆடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். 2. இவ்வாறு முன்மாதிரியாக பந்தெறிந்து ஆடிப் பார்க்கின்ற பொழுது, ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது. 5 முறை பந்தெறிந்து ஆட வேண்டும் என்ற அளவினை மீறி, பந்தெறிபவர் எறிந்தால், அவர் அவ்வாறு எறிந்ததற்காக பந்து (Ball) என்று கணக்கிட்டு நடுவர் எண்ணத் தொடங்கிவிடுவார். ஆகவே, 5 முறைக்குமேல் எறிந்து பார்க்கக்கூடாது. 3. பந்தை எறிந்திட பந்தெறியாளர் தன் கையை பின்புறம் (Windup) கொண்டு செல்லும்போது, பந்து தவறி கீழே விழுந்துவிட்டால், பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். அப்பொழுது தள ஒட்டக்காரர்கள், தாங்கள் தொடப்பட்டால் ஆட்ட