பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


142 హ్రీ மென் பந்தாட்டம் கையில் வைத்துக்கொண்டோ அல்லது பந்தெறிக் கட்டத்தின் மீது சென்று நின்று கொண்டோ தடை செய்ய முடியாது. 10. அடிபட்டுப் பறந்து போகும் பந்தைத் தடுத்தாடுபவர் தொடும் வரையில் நின்று, தன் தளத்தில் நிற்கும் ஒட்டக்காரர் அதன்பின் முன்னேறினால்; 11. தள ஒட்டக்காரர் சறுக்கி சரிந்து வீழ்ந்து (Siding) தளத்தை அடையும்போது தளம் நகர்ந்து சென்றால், தளமும் ஒட்டக்காரருடன் சென்றதாகக் கருதப்படும். தண்டனை:தள ஒட்டக்காரர் பாதுகாப்பாக அடைந்த நிலையில் தளத்தைத் தாண்டி சென்றதற்காக வெளியேற்றப்பட மாட்டார். தளம் சரியாக இடப்பட்டவுடன் அவர் திரும்பவும் தளத்தைவிட்டு வெளியேற்றும் வாய்ப்பில்லாமல் வந்தடையலாம். தள ஒட்டக்காரர் தளம் திரும்ப முன்னிருந்த இடத்தில் இடப்படுமுன் முன்னேற முயற்சித்தால், இந்த தகுதியை அவர் இழக்க நேரிடும். 11. பந்து நிலையானது - பந்து ஆட்டத்தில் இல்லை எனும் சூழ்நிலை 1. பந்து நிலைப்பந்தாகும். பந்து ஆட்டத்தில் இல்லை என்று கீழ்க்காணும் சூழ்நிலையில் தீர்மானிக்கப்படும். 1. பந்து தவறான முறையில் அடிக்கப்பட்டபோது: 2. பந்தை வீசுபவர் வீசுவதற்குத் தயாராகயிருக்கும் பொழுது, அடித்தாடுபவர் ஒரு கட்டத்திலிருந்து (Bo: அடுத்த கட்டத்திற்குத் தாண்டிப் போனால்;