பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 హ్రీ மென் பந்தாட்டம் வேண்டிய பந்தோ, அடித்தாடும் மட்டையோ எதுவும் கிடையாது. என்றாலும் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடியே ஆக வேண்டும் என்று விலகாத விருப்பத்திற்கு ஆட்பட்டு அல்லாடிக் கொண்டிருந்த போது தான், அதிசயமான, வேடிக்கையான அந்த நிகழ்ச்சி நடந்தது. பழைய குத்துச் சண்டைக் கையுறைகளை (Gloves) எடுத்து ஒரு சிலர் வேடிக்கையாக அறைக்குள்ளே வீசி எறிந்து கொண்டிருந்தார்கள். அவர்களிலே ஒரு பையன் கீழே கிடந்த விளக்குமாற்றை எடுத்து, வீசி எறிந்த கையுறைகளை தடுத்து அடித்துத் தள்ளிக் கொண் டிருந்தான். இதை வேடிக்கை பார்த்து மகிழ்ந்து கொண் டிருந்தார்கள் மற்றவர்கள், அவர்களிலே ஒரு மனிதருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரையும் அறியாமல் வாய்விட்டு அலறிவிட்டார். 'ஆகா! அருமையான விளையாட்டு! எல்லோரும் ஒடிவாருங்கள்!!” என்று அங்கிருந்த அனைவரையும் அழைத்தார் அவர். வந்தவர்கள் வினாக்குறியுடன் நின்றார்கள். 'பிடியுங்கள் ஆளுக்கொரு பக்கம்” என்று ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே சுருட்டி வைக்கப் பட்டிருந்த மல்யுத்தம் போடுகின்ற மெத்தை விரிப்பைத் (Mat) தூக்கிவரச் செய்து, அரங்கத்தின் மத்தியிலே விரிக்கச் செய்தார். ஆமாம் புதிய ஆட்டத்தை ஆடுவதற்குரிய ஆடுகளம் ஒரு சில நிமிடங்களில் உருவாகிவிட்டது.