பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா ြဲ- 35 போய்விடும். எவ்வளவு தான் அடித்தாடும் ஆட்டக் காரர்களும் (Batters). தடுத்தாடும் ஆட்டக்காரர்களும் (Fielders) ஒரு குழுவில் இடம் பெற்றிருந்தாலும் சரி, அந்தக் குழு வெற்றியை எதிர்பார்ப்பது வீண் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ~ எறிபவரின் மனோநிலையும் எறியும் முறையும் 1. பந்தெறியும் ஆட்டக்காரர் தன் குழுவின் சிறப்பான ஆட்டத்திற்காகப் பாடுபடும் கடின உழைப்பாளராக; ஆத்திரம் அடையாத நிதானத் தன்மை உள்ளவராக; தானே புகழ்பெற வேண்டும் என்பதற்காகத் தகாத வழியினில் தனது திறமையைப் பயன்படுத்தும் பேராசை இல்லாதவராக; சுருங்கக் கூறினால் சுயநலம் சிறிதுமில்லாத நேர்மையாளராக இருக்க வேண்டும். 2. எந்த நேரத்திலும், நிலையிலும், தான்தான் அதிக ஆற்றல் உடையவன், சிறந்தவன் என்ற தலைக்கணம் எழாமல், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆடுகின்ற,