பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 43 அடிக்க முடியாதவாறு பந்தானது மேலோ அல்லது கீழோ அல்லது பக்கவாட்டிலோ போவதுபோல ஏமாற்றி எறிந்திடவேண்டும். அப்பொழுதுதான் அவரை எளிதாக ஆட்டமிழக்கச் செய்ய முடியும். 8. எல்லா தளங்களிலும் (Bases) எதிராட்டக்காரர்கள் நின்று கொண்டிருக்கும்போது, அடித்தாட வருகின்ற ஆட்டக்காரருக்கு (Batter), பந்தை சரியாக எறிந்து விட்டால், அவர் வேகமாக இழுத்தடித்தால் பந்து தூரமாகப்போய் விழும் பொழுது, எல்லோரும் 'ஒட்டம்' எடுத்துவிடக் கூடிய வாய்ப்பு கிடைத்துவிடும். ஆக, அந்த இக்கட்டான சூழ்நிலையை முறியடிப்பது பந்தெறியாளரது கையில்தான் இருக்கிறது. எறிகின்ற பந்தானது, அடித்தாடுபவரின் முழங்கால் அளவுக்குப் போவதுபோல எறிந்து, அவரையும் அந்தப் பந்தைத் தரையோடு தரையாக அடித்தாடுவது போல ஆட வைக்கின்ற தன்மையில் எறிய வேண்டும். அப்பொழுதுதான் எதிராட்டக்காரர்களை எளிதாக ஆட்டமிழக்கச் செய்ய முடியும். 9. தன் குழுவிற்காக, தன் சாமர்த்தியம் முழுவதையும் தானமாக்கத் தயாராக இருக்கின்றவராக பந்தெறியாளர் இருக்க வேண்டும். தனது குழுவினர் தவறினை இழைக்கும் பொழுது அவர்களை திட்டாமலும், எரிந்து விழாமலும் பக்குவமாக அவர்களிடம் பேசி, உற்சாகப்படுத்தி சரியாக ஆடச் செய்ய வேண்டும். 10. எப்பொழுதும் உடலைப் பதப்படுத்திக் கொண்டு (Warm up) தான் பந்தெறி தளத்திற்குச் செல்ல வேண்டும்.