பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.நவராஜ் செல்லையா ఖ్పె 49 பந்தடித்தாடுவதாகும். அதனைத் தொடர்ந்து இரண்டாவ தாக வருவது தளத்திற்கிடையில் ஒடி நிற்பதாகும் (Base Running). அவ்விரண்டு தலையாய நுணுக்கங்களில், முதலில் பந்தாடித்தாடும் திறனுள் நிறைந்திருக்கும் ஆடும் முறைகளை இனி விரிவாகக் காண்போம். அடித்தாடுவது என்பதில் அடித்தாட நிற்கும் நிலையானது (Stance) ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது ஆட்டக்காரரின் உடல்வாகு, ஆடும் வசதி, பழகிக் கொண்டிருக்கும் பழக்கம் இவற்றைப் பொறுத்தே நின்றாடும் நிலை வேறுபடும். ஆகவே, அடித்தாட வருபவர்கள் அந்த இடத்திற்கு வந்தவுடன், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் இங்கு கவனிப்போம். முக்கிய குறிப்புக்கள் 1. பந்தாடித்தாடும் இடத்திற்கு ஆடும் மட்டையுடன் வந்தவுடன், பந்தெறிபவர் எறியும் எறிக்காகக் காத்திருக்க