பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா အဲ့ဲ- 53 இருப்பதுடன் தனது தேகத்தின் முழுசக்தியைப் பயன்படுத்திப் பந்தை சந்தித்து அடித்தாடக்கூடிய ஆற்றலையும் அது அளித்துவிடும். 12. அடித்தாடும் முறையில் வேகமாகத்தான் அடித்தாட வேண்டும் என்பதில்லை. சில சமயங்களில், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றாற்போல, பந்தைத் தொட்டாடி விட்டுப் போகின்ற (Bunt) ஆட்ட முறையும் உண்டு. அதனையும் இங்கே விரிவாகக் காண்போம். தொட்டாடும் முறை (Bunt) எல்லா ஆட்டக்காரர்களுக்கும் இந்த ஆட்ட முறை தெரிந்திருப்பது மிகமிக அவசியமானதாகும். குழுவின் வெற்றிக்கு இம்முறை, சிறப்பான திறன் நுணுக்கம் நிறைந்ததாகவும் அமைந்திருக்கிறது. வேகமாக அடித்தாட முடியாத அலலது தெரியாத ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Batter) தளங்களில் தனது ஆட்டக்காரர்கள் இருந்து கொண்டிருக்கும் பொழுதும், அல்லது, இரண்டு ஆட்டக்காரர்கள் தங்கள் குழுவில் ஆட்டமிழந்த நிலையில் (Out) இருக்கும் பொழுதும் இதுபோல் தொட்டாடி விட்டு ஓடினால், அது பயனுள்ள ஆட்டமுறையாக அமைந்துவிடும் என்று ஆட்ட வல்லுநர்கள் கூறுகின்றார்கள். ஆடும் முறை சற்று குனிந்தவாறு இருந்து, தரைக்கு இணையாக இருப்பது போல மட்டையைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். மட்டையைப் பிடித்திருக்கும் முறை இதில் சற்று மாறுபட்டிருப்பதையும் நாம் காணலாம்.