பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா હો- 67 3. மூன்றாம் தளக் காப்பாளர் (Third Base Man) 1. மூன்றாம் தளத்தைத் தீ முனை (Hot Corner) என்று கூறுவார்கள். இந்தத் தளம் நோக்கித்தான் அடிபட்ட பந்து வெகுவேகமாக அடிக்கடி வரும். முதல் இரண்டாம் தளங்களிலிருந்து பந்து அடிக்கடி வந்தவண்ணம் இருக்கும். இந்தத் தளத்திலிருந்து ஒருவர் ஒடித் தப்பிப் போய்விட்டால், ஒரு ஒட்டம் எடுத்துவிடுவார்களே! 2. அதனால், தூரரத்திலிருந்து வந்தாலும், வேகமாக எறியப்பட்டாலும், வருகின்ற பந்தைத் தவறவிடாமல் பிடிக்கும் திறமையுள்ளவரே மூன்றாம் தளத்தில், நிறுத்தப்பட வேண்டும். அதுபோலவே, பந்தைப் பிடித்து சரியாக ஆள் பார்த்து எறிவதிலும் நல்ல தேர்ச்சியுள்ளவராகவும் இருக்க வேண்டும். 3. தொட்டாடி விடுகின்ற (Bunt) பந்தைப் பிடித்து விடவும் அல்லது தடுத்தாடவும் இவருக்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனால் சிறிது நேரத்தைக் கூட வீணாக்காமல், பந்தைப் பிடித்ததும் எறிகின்ற பழக்கம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். 4. தேவையில்லாமல் இவர் பந்தை எங்கும் எறியவே கூடாது. 5. எதிர்க்குழு ஆட்டக்காரர்களின் இயங்கும் திசை தெரிந்து, அதற்கேற்றவாறு, இவர் விரைந்தாடிட வேண்டும். 6. ஆட்ட நேரத்தில் எதிர்க்குழுவில் எத்தனைபேர் ஆட்டமிழந்திருக்கின்றனர்? அவர்கள் எடுத்திருக்கும் ஒட்டங்கள் எத்தனை? அவர்களது ஆட்டமுறை எப்படி