பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சிறந்த ஆட்டத்திற்கு சில பயிற்சி முறைகள் ஆட்டக்காரர்கள் குழுவாக இணைந்து கூடி ஆடினாலும், தனிப்பட்ட ஆட்டக்காரர்களின் திறன் நுணுக்கமும் சிறந்து விளங்கினால்தான், அக்குழுவானது வெற்றிபெற வழிவகுத்துக் கொடுக்கும். ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஆட்டத்தில் உள்ள திறன் நுணுக்கங் களை ஆர்வ மிகுதியால் பழகிப் பயிற்சி செய்து வரவேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால், தங்களது குறைகள், பலஹlனங்கள் தங்களுக்கே நன்றாகப் புரிந்துவரும். புரிந்து கொள்கின்ற பொழுதே, அவற்றைக் களைந்தெறிந்து திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. தவறுகள் மறைய மறைய, புதியன புரிந்து கொண்டே வரும். அப்பொழுது புதுப்புது ஆட்டத் திறன்களைக் கற்றுக்கொள்ளும் வகை பிறந்துவிடும்.