பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

じじ So- oமன பநதாடடம so. 56m (BGsuit (Base Umpire) 1. எந்த ஆட்டக்காரரும் தளங்களில் நிற்கவில்லை யென்றால், முதல் தளம் இருக்கும் இடத்திலிருந்து ஆடுகளத்திற்கு வெளியே 10 அல்லது 15 அடிக்கு அப்பால் நின்று கொண்டிருக்கலாம். 2. முதலாம் தளத்தில் ஒட்டக்காரர் வந்து நின்றுவிட்டால், முதல் இரண்டு தளங்களுக்கிடையே நின்று கொள்ளலாம். அப்படி நிற்பதால், முதல் இரண்டு தளத்தில் நிற்கும் ஒட்டக்காரர்களையும், பந்தெறி பவரையும், பந்தடிபடுவதற்கு முன்னதாகவே தளம் விட்டு ஒடும் ஒட்டக்காரரையும் கண்காணித்துக் கொள்ளலாம். 3. ஆட்டத்தை நன்கு கண்காணிக்க முன்னும் பின்னும் தன்னிச்சையாக இயங்கலாம். ஆனால் ஒட்டக்காரர்களுக்கு இடைஞ்சலாக அவர்கள் ஒடும் பாதையில் எப்பொழுதும் நிற்கக்கூடாது. அவர்கள் பார்வையை மறைக்கும் வகையிலும் நிற்கக் கூடாது. 4. ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்றைப் பார்த்துவிட்டால் பார்த்த பிறகும், பேசாமல் இருங்கள். எதிர்க்குழுவினர் அதை உங்கள் கவனத்திற்கு உடனே கொண்டு வந்துவிட்டால்தான் நீங்கள் அது பற்றிக் கூற வேண்டும். ஆகவே, உங்கள் கடமை பற்றிய குறிப்புக் களையும், தெரிந்து வைத்தக் கொள்ளுங்கள். முதல் தளம், இரண்டாம் தளம் பற்றியே தான் உங்கள் முடிவு எப்பொழுதும் இருக்க வேண்டும்.