பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ဒါ့ငဲ့- 87 உடையைத் தொட்டதா அல்லது நடுவரைத் தொட்டதா என்று முடிவெடுத்தல். 5. மட்டையில் அடிபட்டு உயரே போன பந்து ஆடுகளத்திற்குள்ளே இருந்ததா அல்லது வெளிப் புறமாகப் பறந்து போனதா என்று தீர்மானித்தல். 6. அடிபட்டுப்போன பந்து சரியான முறையில் பிடிக்கப்பட்டதா இல்லையா என்று கூறுதல். 7. சரியாக அடிக்கப்பட்ட பந்தினைத் தொடர்ந்து, முதல் அல்லது இரண்டாம் தளத்திற்கு ஒட்டக்காரர்கள் ஒடுவதைக்கண்டு முடிவெடுத்தல். 8. பந்து பிடிக்கப்படுவதற்கு முன்னர் ஒன்றுக்கு மேற்பட்டத் தளத்தைக் கடந்து, அல்லது மூன்றாம் தளத்தில் உள்ள ஒட்டக்காரர், தான் நின்ற தளத்திலிருந்து நீங்கி ஓடினாரா, இல்லையா என்பதற்கான முறையீடு (Appeal) வரும்போது தீர்மானித்தல். 9. தவறான எறி முறையினைப் (Illegal Pitch) பற்றி, தள நடுவரைக் கலந்து, முடிவினைக் கூறும் பொறுப் பேற்றல். 10. குறிப்பேட்டை ஆராய்ந்து, கடைசியிலே கையொப்பமிடுதல். 11. இறுதியாக இரு குழுவினரும் எடுத்த ஒட்டங் களின் எண்ணிக்கையினை பார்வையாளர்களுக்குத் தள நடுவர் தெரிவித்தல். இவ்வாறு பணியாற்றுகின்ற அடித்தாடும் தள நடுவருடன், நின்றாடும் தள நடுவர் எவ்வாறு ஒத்துழைத்துப் பணியாற்ற வேண்டும் என்பதை அடுத்து வரும் பகுதியில் விவரமாகக் காண்போம்.