பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

வ.கோ. சண்முகம்


பொய்பேசா மெளனி யாகி வந்தவனை அலட்சியமாக சாய்வாகப் பார்த்த வாறே தண்டாமிஸ் புன்ன கைத்தார் ! பாய்போட்டே அமரச் சொல்வார்; பயப்படுவார் என்றி ருந்த மாய்மாலன் ஒனஸிக் ரேட்டஸ் ஒரேடியாய் ஏமாந் திட்டான்! மாமன்னன் அலெக்ஸாண் டர்தன் மகத்தான தளபதியையா சாமானிய பிச்சைக் காரத் தண்டாமிஸ் அவம திப்பது? ஏமாந்தா போவது? போனால் எரிமலையே வெடித்தாற் போல கோமாதான் கொதிகொதிப் பானே கொல்லவும் தயங்கி டானே? இவ்வாறாய்த் தன்னுள் எண்ண இழைபின்னிய ஒனஸிக் ரேட்டஸ் ஒவ்வாத மொழிகள் கூறி உள்சினத்தை உமிழ லானான்! ஜவ்வாது தனையே பார்த்துச் சாணிதான் பழித்திட்ட தேபோல் அவ்வாறு நடந்த போதும் அரைச்சிரிப்பே சிரித்தார் சித்தர்!