பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

வ.கோ. சண்முகம்


கீழறங்கும் சூரியனைக் காணும் தோறும் 'கிர்ரென்றே நாரதனின் ஆத்தி ரந்தான் ஏழுலகும் இரைதேடிக் குமுறு லாச்சு! இருகால்கள் தள்ளாட அலைய லானான்' கலகமின்றி நாள்ஒன்று கழிய லாமா? கடுகடுத்தான் சீக்கிரத்தில் கலகம் செய்ய! வலைவீசி ஆகத்தான் வேண்டும் இன்றேல் வரும்கேடு, தோல்விஎன நொந்தான் முனிவன்! அந்நாளில் அரைநாளும் கழிந்து, வானம் அந்தியதன் அலரிப்பூ வர்ணம் காட்ட முந்நாளில் தான்பெற்றச் சாபம் பற்றி முனிவனுக்கு நினைவேறக் குழம்பலானான் சஞ்சார முனிவனுக்கே பயணம் செய்யும் சங்கீத யாழினுக்கே அந்நநாள்தான் நஞ்சான சோதனைநாள் தனக்கே எட்டில் சந்திரன்தான் உலவும் நாள் அதைம றந்தான்!