பக்கம்:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

வ.கோ. சண்முகம்


இனிஎன்ன யோகமுண்டு, பிரம்ம தேவா? இறந்தொழிந்து ஜடமாகச் சகதிக் குள்ளே 'மனிதத்தலை என்கின்ற ஓர்அடை யாள வடிவுடனே கிடப்பதுவா யோகும் ஆகும்? என்றெல்லாம் எக்காளக் குரலில் முழங்கி எகத்தாளம் செய்திட்டான் நார தன்தான்! என்றும்போல் அமைதியுடன் பிரம்மதேவன் இளஞ்சிரிப்பு உதடேறக் கூற லானான்: 'மிகநன்று நாரதரே, தங்கள் வாதம் மேலும் மகிழ்வுடனே நன்றி கூறி புகல்கின்றேன் சிலவார்த்தை தயவு செய்து பொறுமையுடன் கவனமுடன் கேட்பீர் ஐயா! புங்கவனே! முக்காலம் தனையு ணர்ந்த புனிதமிகு ஆன்றோனே இந்த நாள்தான் தங்களுக்கே ஆகாத நாளாம்! கருமம் சாடுவதால் வீணாகத் தோல்வி கண்டீர்!