பக்கம்:மேனகா 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மேனகா

செம்புகள் உருண்டு போய்த் தவலைகளிடம் முறையிட்டன. தவலைகள் தக்காளிப் பழமாய் நசுங்கிப் போய்ச்சுவரில் முட்டி அதைத் தட்டி யெழுப்பின; சுவர்களோ தாம் நியாயாதிபதியான டிப்டி கலெக்டர் வீட்டிலிருந்தும், அம்மாளின் செய்கைக்கு அப்பீலில்லையே என்று வருந்தி வாய்விட்டாற்றின. அடுப்புகள் இடிந்தன. துடுப்புகள் ஒடிந்தன, அறைகள், ஜன்னல்கள் முதலியவை அவள் நடந்த அதிர்ச்சியால் நடுக்கு ஜுரங் கொண்டு நடுங்கின. அரிசியும் பருப்பும் சிதறி யோடின. “பாழும் வயிற்றிற்கு இன்றைக்குக்கூடப் பிண்டமா?” என்று நினைத்த அம்மாள் அடுப்பில் தண்ணீரை வார்த்து அதற்கு நீராட்டம் செய்து வைத்தாள். மறைந்துகொள்ள இடமில்லாமல் ஓட்டின் மீது அஞ்சி நின்ற பூனைக்கூட்டி, அம்மாள் அடுப்பிற்கு அன்று விடுமுறை நாள் கொடுத்ததையறிந்து, அவளுக்குத் தெரியாமல் அதற்குள் மறைந்து அம்மாள் வருகிறாளோ வென்பதை அறிய இரட்டைத் தீவெட்டி போட்டதைப் போல கண்கள் மின்ன உற்றுப் பார்த்திருந்தது, அப்பூனைக்குட்டியைக் காட்டிலும் அதிகரித்த அச்சத்தையும், பெண்ணைப்பற்றிய விசனத்தையும் கொண்ட டிப்டி கலெக்டரின் மனையாட்டி தங்கம்மாள், மேனகா காணாமற் போனது பொய், தான் காணாமற் போனது நிஜமென்று செய்ய நினைத்தவளைப் போலக் கட்டிலிற்கடியில் மறைந்து துப்பட்டியால் தலைமுதல் கால்வரையில் மூடிப் படுத்து டிப்டி கலெக்டர் தன்னையும் தேடும்படி செய்தாள். அந்தப் பெரும்புயலையும் மழையையுங் கண்டு அதிலிருந்து தப்ப நினைத்த ரெங்கராஜு தனக்கு வயிறு வலிக்கிறதென்று எதிரிலுள்ள சுருட்டுக்கட்டை இராமச்சந்திராவிடம் சொல்லி விட்டுக் கம்பி நீட்டினான்.

“என்ன ஆச்சரியம் இது! நான் பட்டணத்திற்குப் போனேனாம்! அவர்களிடம் சொல்லாமல் பெண்ணை அழைத்து வந்துவிட்டேனாம்! ஜெகஜாலப் புரட்டா யிருக்கிறதே! இந்தத் தந்தியை வேறு யாராயினும் அனுப்பி யிருப்பார்களா? இங்குள்ள நம்முடைய விரோதிகளின் தூண்டுதலினால் நடந்திருக்குமா? பெருத்த அதிசயமாய் இருக்கிறதே!” என்று சாம்பசிவம் தனக்கு எதிரிலிருந்த கம்பத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/110&oldid=1251020" இலிருந்து மீள்விக்கப்பட்டது