பக்கம்:மேனகா 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணாமற் போனாயோ கண்மணியே?

93

தோடு பேசினார். அதைக் கேட்ட தாய் “போடா! பைத்தியக்காரா! நம்முடைய தந்தி போய்ச் சேர்ந்து இரண்டு நாழிகையாயிருக்குமே. பொய்த் தந்தியா யிருந்தால் உடனே மறு தந்தி அனுப்பி யிருக்கமாட்டானா? இம்மாதிரி பொய்த் தந்தி அனுப்புவதால் யாருக்கு லாபம்? ஒன்றுமில்லை. நிஜமாய்த்தான் இருக்கும். அந்த முண்டைகள் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்களே; அந்தப் பைத்தியம் வீட்டை விட்டுப் போயிருக்கையில் பெண்ணை வெட்டிக் கொல்லை யிற் புதைத்துவிட்டு, அவனிடம் இப்படிப் பொய் சொல்லி யிருப்பார்களா!” என்று ஆத்திரமும் துடிதுடிப்புங் கொண்டு கூறினாள்.

சாம்ப:- அவர்களுக்கு நம்முடைய குழந்தையிடத்தில் அவ்வளவு பகைக்கென்ன காரணமிருக்கிறது? அப்படி வெறுப்பவர்கள் இங்கிருந்தவளை அழைத்துப்போகவேண்டிய தன் காரணமென்ன? - என்றார்.

கனகம்:- உன்னைப்போல படித்த முட்டாள் ஒருவனும் இருக்க மாட்டான். பணத்தாசைஎதைத்தான் செய்யாது? அவள் உடம்பிலிருந்த நகைகள் மூவாயிரம் பெறுமே, அவைகளை எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? அதற்கா கத்தான் இருக்கலாம். என்னவோ எல்லாம் நாளைக்குக் காலையில் விளங்கப் போகிறது. இன்றைய பகலும் இரவும் போகவேண்டுமே! பாழாய்ப்போன ரயில் சாயுங்காலத் திலல்லவா பட்டணத்திற்குப் புறப்படுகிறது. நீ அங்கே போனவுடன் அவசரத் தந்தி அனுப்ப வேண்டும். பேசாம லிருந்து விடாதே - என்றாள்.

சாம்ப:- கலெக்டர் இன்று காலையில் ஒருகாரியமாக என்னை வரச்சொல்லி யிருந்தார். நான் வரவில்லையென்று அவருக்குக் கோபமுண்டாயிருக்கலாம். ரஜாக் கொடுக் கிறாரோ இல்லையோ தெரியவில்லை, கொடுக்காவிட்டால் என்ன செய்கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/111&oldid=1251021" இலிருந்து மீள்விக்கப்பட்டது