பக்கம்:மேனகா 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காணாமற் போனாயோ கண்மணியே?

97

கலெக்டர் துரையிடத்திலிருந்து வந்தது என்பதைக் கூறுதல் மிகையாகும். அதைப் படித்த சாம்பசிவத்தின் முகம் மாறியது. கோபத்தினால் தேகம் துடித்தது. பெரிய கலெக்டர் அங்கி ருந்தால் அவருடன் கைக்குத்துச்சண்டைக்குப் போயிருப்பார். என்ன செய்வதென்னும் குழப்பமும் கோபமும் ஒன்று கூடி அவரைப் பெரிதும் வதைத்தன. மதிமயக்கங் கொண்டு திரும்பவும் தமது நாற்காலியில் சாய்ந்து விட்டார். ரஜாக் கொடுக்கப்படவில்லை என்று உணர்ந்த கனகம்மாளின் நிலைமையை வருணித்தல் எளிய காரியமன்று. குரங்கு இயற்கையில் சுறுசுறுப்பானது. அது மரத்திலேறி கள்ளைக் குடித்துவிட்டது. உச்சியிலிருந்த பேயொன்று குரங்கைப் பிடித்துக்கொண்டது. கீழே இறங்குகையில் தேளொன்று அதைக் கொட்டி விட்டது. அத்தகைய நிலைமையில் அக்குரங்கு எவ்வித ஆடம்பரம் செய்யுமோ அவ்வாறு கனகம்மாள் காணப்பட்டாள். அவளுடைய கோபமும், ஆத்திரமும் குதிப்பும் ஆயிரம் மடங்கு பெருகிப் பெரிய கலெக்டர் மீது திரும்பின. அவனுக்கு சகஸ்ரநாம (1000 - பெயர்களால்) அருச்சனை செய்யத் தொடங்கினாள். அது பேரிடி மின்னல்களுடன் ஏழு மேகங்களும் ஒன்று கூடி அந்த மாளிகைக்குள் பொழிந்ததை யொத்தது.

அப்போதே அந்த மழைக்கு அஞ்சி அதில் நனையாமல் இருக்க முயல்பவனைப் போல சுவரோரத்தில் பதுங்கி, இடையில் அணிந்த வஸ்திரத்தை மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு மெல்ல ஒரு சேவகன் டிப்டி கலெக்டர் இருந்த இடத்திற்கு வந்தான். அவனைக் கண்ட சாம்பசிவம் கோபத்தோடு உரத்த குரலில், “ஏனடா! என்ன சங்கதி?” என்று அதட்டிக் கேட்டார். மழையில் நனைந்தவனுக்கு நடுக்கம் உண்டா தலைப்போல, அவனுடைய கை, கால்கள் அச்சத்தினால் வெடவெடென்று நடுங்கின. துணிந்து அவனது வாய் வரையில் வந்த சொல், திரும்பித் தொண்டைக்குள் போய்விட்டது. அவர் மேலும் இனுனொருமுறை முன்னிலும்மே.கா.:-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/115&oldid=1249521" இலிருந்து மீள்விக்கப்பட்டது