பக்கம்:மேனகா 1.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிச்சையெடுத்தது பெருமாள்; பிடுங்கித்தின்றது அனுமார்.

175

பாவமடா? எழுந்து வா!” என்று கடுமையாக அழுத்தி நூறாம் முறை கூறினாள்.

வராகசாமி அதைக் கேட்கப் பொறாமல், “எனக்குப் பசியில்லை, நீங்கள் சாப்பிடுங்கள். பசி உண்டாகும்போது வருகிறேன்” என்று அருவருப்பாக மறுமொழி கூறினான்.

பெருந்தேவியா அவனை உயிரோடு விடுகிறவள்? “காலை முதல் காப்பி கூட சாப்பிட வில்லை; மணி இரண்டாகிறது. இதென்ன பெருத்த வதையாயிருக்கிறதே! பசிக்க வில்லையாமே! இவ்வளவு நாழிகை பசியாமலிருக்க நீ எதைச் சாப்பிட்டாய்? சேலத்திலிருந்து பசியா வரம் வாங்கிக்கொண்டு வந்தாயா? கிடக்கிறது எழுந்து வா; கொஞ்சமாக சாப்பிட்டு விட்டுப் போய் படுத்துக்கொள்கிறது தானே? உன்னை யார் விசனப்பட வேண்டாம் என்று சொல்கிறார்கள்?” என்று அன்போடு அதட்டி மொழிந்தாள்.

வராக:- அக்காள் என்னை வீணாக ஏன் உபத்திர விக்கிறாய்? எனக்கு இப்போது சாப்பாட்டில் மனம் நாட வில்லை. இராத்திரி வேண்டுமானால் பார்த்துக்கொள்வோம்.

கோமளம்:- இராத்திரி வரையில் உபவாசமிருந்தால் போனவள் வந்துவிடுவாளா? அல்லது இந்த ஒரு வேளைப் பட்டினியோடு இந்த அவமானம் நீங்கிப் போகுமா?

பெருந்தேவி:- இனிமேல் அவள் ஏன் வருகிறாள்? அவள் வந்தாலும் நாம் அவளைச் சேர்த்துக்கொண்டால் நம்முடைய வீட்டில் நாய் கூடத் தண்ணிர் குடிக்காதே (கையை மோவா யோடு சேர்த்து வியப்புக்குறி காட்டி) அடி என்ன சாகஸமடி! என்ன சாமர்த்தியமடி! அந்தத் தடியனை டிப்டி கலெக்டரைப் போல வரச்சொல்லி இந்தப்பட்டி முண்டை மகா தந்திரமாய்ப் போய்ச் சேர்ந்துவிட்டாளே! எனக்கு இப்போது நன்றாய் ஞாபகம் உண்டாகிறது; இந்த ஒரு வாரமாக நான் கவனித்தேன். கொள்ளு கொள்ளென்று இருமிக்கொண்டு ஒரு கிழட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/193&oldid=1251052" இலிருந்து மீள்விக்கப்பட்டது