பக்கம்:மேனகா 1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

185

நடிகைகளாகவும், தம்மை, அந்த நாடகத்தைப் பார்க்க வந்துள்ள சபையோராகவும் மதித்து, காலைமுதல் மாலைவரையில் சோர்வின்றி அந்த இன்பகரமான வேலையில் உழைத்து வந்தனர். அப்போதைக் கப்போது வெளியாகும் நாவல்கள் முதலிய நூல்களின் குண தோஷங்களைப்பற்றி பத்திரிகைகள் மதிப்புரை எழுதுதலைப் போல இந்தச் சபையார் தெருவிற் சென்ற ஒவ்வொருவருடைய வடிவம், அழகு நடை உயரம், பருமன், ஒழுக்கம், கற்பு முதலிய யாவற்றையும், நன்றாக ஆராய்ச்சி செய்து தீர்மானங்கள் சொல்லிக்கொண்டு வந்தனர். முக்கியமாக பெண் பாலார் விஷயத்திலேயே அவர்கள் தமது புத்தியையும், நாட்டத்தையும் கூர்மையாகச் செலுத்தினர்.

ஒரு நாள் பிற்பகலில், இயற்கையிலேயே பெரிதும் நாணங்கொண்ட ஒரு யெளவன மடந்தை தனது கட்டை விரலைப் பார்த்த வண்ணம் அந்த வீட்டுவாயிலின் வழியாக சென்றவள், திண்ணையிலிருந்த சோம்பர் மகா சபையாரைக் கடைக்கண்ணால் தற்செயலாகப் பார்த்துவிட்டாள். அவர்கள் நால்வரின் கருணாகடாட்சமும் தன் மீது விழ்ந்திருந்ததை அவள் உணர்ந்துவிட்டாள். அவளுடைய வெட்கம் மலைபோலப் பெருகியது. புத்தி குழம்பிவிட்டது. தலை சுழன்றது, தெருவும், வீடுகளும், “விர்” ரென்று ஆகாயத்தில் கிளம்பியதாகத் தோன்றின. அந்தக் குழப்பத்தில் அவளுடைய சேலை ஒருபுறம் நெகிழ்ந்து நெடுந்துாரம் பிரயாணம் சென்றது. தலை இன்னொரு பக்கமாகத் திரும்பித் தனது ஸ்தானத்தை விட்டுப் போனது. கால்கள் பின்னற் கோலாட்டம் போட்டன. கைகளும், விரல்களும் வையாளி பாய்ந்தன. ஏழெட்டு வீடுகளுக்கு அப்பாலிருந்த தன் கூடு ஒரு காத வழியைப் போலத் தோன்றியது. அதை எப்படிச் போய்ச் சேரப்போகிறோமென்று கவலை கொண்டு வேகமாய் நடந்தாள். தலையின் ஆட்டம் அதிகரித்தது. அந்த அவசரக் கோலத்தைக் கண்ட அக்கிராசனர் அன்னக்காவடியா பிள்ளை திகம்பரமையரை பார்த்து பரிகாசமாகக் கண் சிமிட்டி, “அடே அடே பாருடா ஜோக்கே, உடம்பு எப்படி நெளியுதையா! கால் பூமியிலேயே நிக்கல்லியே! அடே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/203&oldid=1250726" இலிருந்து மீள்விக்கப்பட்டது