பக்கம்:மேனகா 1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

மேனகா

செளண்டியப்பா! ஒன் கூத்தியா இவ்வளவு ஜோக்கா நடப்பாளா பாருடா!” என்று அநந்த பரவசம் அடைந்தவராய்க் கூறினார். அதைக் கேட்ட திகம்பரமையர், “அடே யப்பா காக்கா, “கர்” ரென்ற புருஷனை அப்பாடான்னு கட்டிக் கிண்டாளாம்” என்று சாப்பாட்டு ராமையங்காரைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி, நாவால் நொட்டையிட்டார். அன்னக்காவடியா பிள்ளை, “அடே திகம்பரம்! நீ எப்போதும் ஒன் குறும்பை மாத்திரம் விடமாட்டாயே? சாப்பாட்டு ராமன் தெய்வமென்று குந்தியிருக்கிறான். அவனுக்கும் அவளுக்கும் என்னடா முடிச்சுப் போடறே? ஏண்டா சாப்பாட்டுராமா! ஆசாமி ஆருடா இது? திருட்டுப் பயலே! நெசத்தைச் சொல்லி விடு” என்றார்.

அதைக் கேட்ட ஐயங்கார், “அடே! அடே! திகம்பரம்! ஒங்கவீட்டுப் பக்கத்திலேயே சரக்கை வைச்சிக்கிண்டு, எந்த ஊர்ச் சரக்கென்று என்னெக் கேட்கிறியேடா? அடே என்னையா ஆழம் பாக்கிரே? அடே அன்னக்காவடி! இவன் பெரிய மூட்டக் காரண்டா!” என்றார்.

திகம் பரமையர் புன்சிரிப்புடன், “அடே! சத்தியமா எனக்குத் தெரியாதப்பா! எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டிலே இவ இருக்கா. அதுதான் தெரியும்; பலே ஆசாமியாம்; பார்வையிலேயும் அப்படித்தான் இருக்கிறது” என்றார்.

அப்போது அங்கு வந்ததான துர்ப்பாக்கியத்தைப்பெற்ற அந்த அம்மாள் தன் காலின் வெள்ளி மெட்டி கழன்று பாதையில் விழுந்ததையும் எடுக்காமல் செத்தேன் பிழைத்தேனென்று வீடுபோய்ச் சேர்ந்தாள். மகா சபையோருக்கு முன்னால் அப்போது வேறு ஸ்திரீ தெருவில் நடந்தாள். அன்னக் காவடியாபிள்ளை, “அதுபோனாப்போவுது களுதே; இதைப் பாருடா என்ன குலுக்கு? என்ன தளுக்கு? இந்தத் திருவல்லிக்கேணிப் பசங்களுக்குத்தான் இந்தத் தேவிடியா நாட்டிய மெல்லாம் ஆருடா கத்துக் குடுக்கறாங்க?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/204&oldid=1250827" இலிருந்து மீள்விக்கப்பட்டது