பக்கம்:மேனகா 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

மேனகா

தண்ணிர் விட்டு அலம்புவான். என்ன என் துர்ப்பாக்கியம் ஈசுவரா! இந்த துஷ்ட முண்டை ஒழிந்துபோன துன்பத்தோடு என்னை விட்டு விடக்கூடாதா? அவள் யாருக்கு என்ன விதத்தில் உபயோகிக்கப்படுகிறாள் என்பதைக் கூட நான் விவரமாக அறிய வேண்டுமா? அடாடா! என்ன என் தலைவிதி! இந்த மாதிரியான என்னென்றைக்கும் அழியாத அவமானம் அடைவதற்கு இந்த உலகத்தில் நான்தானா தகுந்தவனென்று பொறுக்கி யெடுத்தாய் தெய்வமே? என்ன ஜென்மம் எடுத்தேன்! இதைக் காட்டிலும் மனிதனுக்கு உண்டாகக் கூடிய துன்பம் வேறுண்டா? தெரியாத் தனத்தினால் புலவர்கள் தரித்திரக் கொடுமையே எல்லாவற்றிலும் கொடிதென்றனர். எல்லா விஷயங்களையும் நன்றாய்ச் சொன்ன பொய்யா மொழிப் புலவரான திருவள்ளுவர் கூட இந்த விஷயத்தில் தவறிப் போய்விட்டார். அவர், “இனிமையி னின்னாத துயாதெனி னின்மையி னின்மையே யின்னாதது” என்றார். பூலோகத்தில் தரித்திரக் கொடுமையே எல்லாத் துன்பங்களிலும் பெரிதென்றார். அவருடைய மனைவி நல்ல பதிவிரதையா யிருந்து விட்டமையால், தரித்திரக் கொடுமை யொன்றே அவருக்குப் பெரிதாய்ப்போய்விட்டது. அவர் சொற்படி நடக்க வேண்டுமென்று, நீர் விட்ட பழைய சாதத்தை விசிறிக் கொண்டு விசிறினாளல்லவா? பாதிக் கிணறு வரையில் இழுத்த பாத்திரத்தை, அவர் தன்னைக் கூப்பிட்டமையால், அப்படியே விட்டுவந்தாளல்லவா; அவருக்கு அந்த இறு மாப்பு, அவள் சாதாரணமாக இறந்த போதே,

“அடிசிற் கினியாளே! அன்புடையாளே!
படிசொற் றவறாத பாவாய்! அடிவருடிப்
பின்றுங்கி முன்னெழும் பேதையே! போதியோ?
என்றுங்கு மென்கணிரா?”

என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுத வராயிற்றே! மனைவி அசாதாரணமாகப் புருஷனை விடுத்துப் பிரிதலைப் போன்ற துன்பம் வேறில்லை யென்பது அவருக்குத் தோன்றவில்லையோ? அவர் மகான். அவருக்குத் தோன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/208&oldid=1251054" இலிருந்து மீள்விக்கப்பட்டது