பக்கம்:மேனகா 1.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

மேனகா

முட்டாள் பயல்கள் அல்லவோ வழி சொல்ல வேண்டும். சங்கீதமாம், பள்ளிக்கூடமாம், ஸ்திரீ சுதந்திரமாம், இதுவரையில் சிறையிலிருந்து வரும் பெண்டீரை மீட்கப் போகிறார்களாம். எல்லாம் வாலறுந்த நரியின் கதைதான். இவர்கள் புஸ்தக மூட்டைகளை மார்பில் அணைத்துப் போவது தாம் பெற்ற குழந்தைகளை அணைத்துப் போவதைப் போல அல்லவோ இருக்கிறது. உங்கள் மார்பும் கைகளும் குழந்தைகளை அணைப்பதற்கே தகுந்தவை என்பது இதனால் நன்றாக விளங்குகிறது. புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதைப்போல அயல் நாட்டாரைப் பார்த்து நமது பெண்களும் பக்குவகாலம் அடைந்த பிறகு பள்ளிக் கூடங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் போவதாம். அன்னிய புருஷருக்கிடையில் அருவருப்பின்றி பழகுவதாம், புருஷருக்கிடையில் எழுந்து பிரசங்கம் செய்வதாம், நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் பெண்களின் ஆபரணங்களைக் காற்றில் தூற்றிவிட்டு, அயல்நாடு மாதரைப்போல துடுக்கு, துணிவு, தான் என்னும் ஆணவம், அடங்காமை, பணியாமை, முதலிய துஷ்ட குணங்களைப் பெறுவதாம். பாலிய புருஷர்கள் அவளுடைய அழகில் ஈடுபட்டுக் கைகொட்டி ஆர்ப்பரிப்பதாம்; அந்நிய நாட்டு மாதரைப்போல இவ்விடத்திலும் ஸ்திரீகளைத் தம் விருப்பின் படி செய்ய விட்டுவிட வேண்டுமாம். இதுவரையில் இருந்திருந்த நமது ஸ்திரீகள் செய்யாத பெரிய காரியங்களை புது நாகரீகப் பெண்கள் சாதித்து விடப்போகிறார்களாம். நினைத்த விதம் விபச்சாரம் செய்யலாம் என்னும் எண்ணத்தைக் கொண்ட காமாதுரப் பயல்களின் கொள்கையல்லவோ இது. இப்படிச் சொல்லுகிறவன் தன் பெண்டாட்டி பெண்களை மாத்திரம் அன்னிய புருஷரோடு பழக விடுவதில்லை, தான் மாத்திரம் உலகத்தில் வேறு எந்த ஸ்திரீயோடும் பழகவேண்டுமாம். எத்தனையோ யுகயுகமாய் அநுபவத்தில் ஆராய்ந்து பார்த்து நம் முன்னோர் கண்டு பிடித்த உண்மைகளை இந்தக் காமாதுர மேதாவிகள் மாற்றப் போகிறார்களோ? பெண் வடிவமோ இயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/214&oldid=1251056" இலிருந்து மீள்விக்கப்பட்டது