பக்கம்:மேனகா 1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?

197

யிலேயே மனிதரை மயக்கும் நோக்கம் உடையது. மகளிர் தாயாகவிருந்து புருஷரை வளர்த்து தாரமாக வந்து உயிர் குடிக்கும் இருவித நடத்தை உள்ளவர்கள். புருஷருக்குப் பெண்டிரே இயற்கைப் பகைவர். உலகப்பற்றை நீக்கிப் பிறவிக்கடலைக் கடந்து மனிதர் மோrத்திற்குச் செல்ல முடியாமல் பிள்ளைகளென்றும், பெண்னென்றும், அவற்றின் பொருட்டு வீடென்றும், பொருளென்றும் பல ஆசைகளையும், பற்றுக்களையும் உண்டாக்கி, அவன் தலையெடுக்காவிதம் செய்யும் மோகினி அவதாரம்; தண்ணிர்க்குள் ஆழ்த்தப்படும் கட்டை வெளியில் வரா வண்ணம் கீழேயே இழுத்துக் கொண்டிருக்கும் பொருட்டு பிணைக்கப்படும் கற்கண்டுகளைப் போல, மனிதன் இறப்பு பிறப்பாகிய கடலிலிருந்து மேலே போகாமல் அதற்குள்ளேயே கிடக்கும்படி பிடித்திழுத்துக் கொண்டிருக்கும் விலங்குகள் அல்லவா பெண்டீர். பட்டினத் தார் நன்றாய்ச் சொன்னார்:-

“காதென்றும் மூக்கென்றும் கண்ணென்றும் காட்டியென்

கண்ணெதிரே

மாதென்று சொல்லிவரு மாயைதனை மறலி விட்ட
தூதென் றெண்ணாமற் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென் றெடுத் துரைப்பே னிறைவா கச்சி யேகம்பனே!”

என்றார்.

வீட்டிற்குள் இருந்தவண்ணமே எவ்வளவு அநர்த்தங் களைச் செய்யுங் குணமுடைய இவர்களைக் கண்டாலே மனிதன் உருக்குலைந்து போகிறானே! ஊமத்தங்காய்கள் தின்பவனுக்கே பைத்தியத்தை உண்டாக்குகின்றன; ஸ்திரீகளைக் கண்ணால் பார்த்தாலே மனிதன் உன்மத்தனாய் விடுகிறான். காமத்தினால் தனது ஒழுக்கத்தைவிட்டு கொலை களவு முதலியவற்றைப் புரியத் துணிகிறான்; இப்படிப்பட்ட ஊமத்தங்காய்களுக்கு மேல்நாட்டாரைப்போல தேவடியாள் அலங்காரமும் செய்து, சங்கீதம் கல்வி முதலியவற்றையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/215&oldid=1251057" இலிருந்து மீள்விக்கப்பட்டது