பக்கம்:மேனகா 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

மேனகா

தூஷிக்கப்படாது. எனக்கு இவர் மீது வேறு எவ்வித வருத்தமும் இல்லை. இதுவரையில் நான் அறிந்தவரையில், இவர் என் விஷயத்திலும் மற்றவர் விஷயத்திலும் ஒழுங்காகவே நடந்துகொண்டி ருக்கிறார். இவர் நல்ல தங்கமான குணமுடையவர் என்றே சொல்லவேண்டும். ஆனால், இன்று இவர் செய்தது மாத்திரம் ஏதோ தப்பான எண்ணத்தின் மீது செய்யப் பட்டிருக்கிறது. இதை நம்முடைய வேளைப்பிச கென்றே சொல்லவேண்டும். அவசரமாக வரவேண்டுமென்று இவர் சொல்லி யிருந்தபடி நான் போக வில்லை. அதைக் குறித்துக் கோபம் உண்டாவது மனித சுபாவந்தான். இப்படிச் செய்து விடுவாரென்று நான் சந்தேகித்து என்னுடைய தாயாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். காரியம் அப்படியே முடிந்துவிட்டது- என்று கண்டித்த சொற்களாக நயமாக குரலில் கூறினார்.

அதைக் கேட்ட ராயருடைய முகம் சிறுத்தது. அவமானமும் அடைந்தார். என்றாலும் அதைப் பாராட்டாமல், சாம்பசிவத்தின் நோக்கம்போல தமது பேச்சையும் திருப்பிக் கொண்டார்.

“ஆம் நீங்கள் சொல்லுவது சரியான வார்த்தைதான். இந்த ஒரு விஷயத்திலே தான் முன்கோபத்தினால் இவர் இப்படிச் செய்து விட்டார். சுபாவத்தில் தங்கமான குணமுடையவர்தான். புத்தியும் பெரும்புத்திதான். அதைப்பற்றி சந்தேகமில்லை. என்றாலும், தமக்கு சம அந்தஸ்திலுள்ள தங்களுக்கு அவசரமே இல்லாத காரணமாயிருந்தாலும் ரஜாக் கொடுக்க வேண்டியிருக்க, இவ்வளவு அவசர சமயத்தில் மோசம் செய்ததனாலேதான் வாண்டையார் சொன்னதைச் சொல்லும் படி நேர்ந்தது. எங்களைப் போல இருந்தாலும் பாதகமில்லை. விறகுகட்டுக்காரனுக்கு பிளவை புறப்பட்டால், விறகு கட்டையால் அடிப்பதே மருந்து. நாங்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்வோ” மென்று நேர்த்தியாகப் பேசினார் ராயர். அதைக் கேட்ட சாம்பசிவத்திற்கு முன்னிலும் அதிகரித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/234&oldid=1250898" இலிருந்து மீள்விக்கப்பட்டது