பக்கம்:மேனகா 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

217

அருவருப்பு உண்டாயிற்று. பளேரெனக் கன்னத்தில் அடிப் பவரைப்போல பேசலானார்.

“சேச்சே! அது சரியான பேச்சாகாது. அவசரம் என்றால் பெரிய மனிதருக்கும் அவரசந்தான்; சின்ன மனிதருக்கும் அவசரந்தான். பெரிய மனிதருக்கு மாத்திரம் ரஜாக் கொடுப்பதென்ன? சின்ன மனிதருக்கு இல்லையென்ப தென்ன? காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. எனக்கு என் பெண்ணைப் பற்றி எவ்வளவு விசனம் இருக்கிறதோ, அவ்வளவு விசனம் சின்னமனிதருக்கும் தமது பெண் விஷயத்தில் இருக்கும் உண்மையில் அவசரமான காரிய மிருந்தால், எல்லோருக்கும் ரஜாக் கொடுத்து அநுதாபம் காட்ட வேண்டும். பொய்யான கடிதமாயிருந்தால், எனக்கு ரஜாக் கொடுப்பது தவறாகும். பொய் சொன்னதற்காக தண்டிக்கவேண்டும். டிப்டி கலெக்டரான எனக்கு விசேஷ மரியாதை காட்டவில்லை யென்று துரை மீது குற்றங்கூறுவது ஒழுங்கல்ல. ஏதோ தப்பான எண்ணத்தால், என்னுடைய அவசரத்தைக் கவனியாமல் ரஜாக் கொடுக்க மறுத்த தொன்றைப் பற்றித்தான் நான் விசனப்படுகிறேன்” என்றார். தமது சாமர்த்தியமான தளுக்கு மொழிகளைக் கேட்டு ஏமாறுவார் என்று நினைத்த தாந்தோனிராயருடைய சொற்களை சாம்பசிவம் சின்னாபின்னமாக்கி, அவருடைய தப்பான கருத்தை அவருடைய முகத்திலேயே அடிப்பதைப் போல மொழிந்தார். தாந்தோனிராயர் பெரிதும் வெட்கி, இஞ்சி தின்ற குரங்கைப் போல விழித்து ஏதோ யோசனை செய்பவரைப்போலக் கீழே குனிந்துகொண்டார். அவருடைய கண்கள் தரையை நோக்கின.

அப்போது நாற்காலிக் காலடியில் கிடந்த ஒரு சிவப்புக் காகிதம் அவருடைய கண்களில் பட்டது. அதுவே சென்னையிலிருந்து சாம்பசிவத்திற்கு வந்த தந்தி; அங்கு கனகம்மாளாலும் சாம்பசிவத்தாலும் நடத்தப்பட்ட ஆரவாரத்தில் அசட்டை செய்யப்பட்ட தந்தி காற்றில் பறந்து கீழே விழுந்து நாற்காலி அடியில் கிடந்தது. தாந்தோனிராயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/235&oldid=1250912" இலிருந்து மீள்விக்கப்பட்டது