பக்கம்:மேனகா 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

223

“அப்படியா? கடிதம் ஒன்றும் கொடுக்க வில்லையா?” என்றார் சாம்பசிவம்.

சேவ: - இல்லை எசமான்!

சாம்ப:- வேறொன்றும் சொல்லவில்லையா ?

சேவ:- பட்டணம் போவலாம்; சரிப்பட்டா, எசமான் ரயிலுக்குப் போறத்துக்கு முன்னாலே, அவுங்க வந்து பார்க்கிறேன்னு சொன்னாங்க, அவ்வளவுதான்.

சாம்ப:- அப்படியானால் சரி; நீ போ - என்றார்.

உடனே சேவகன் வெளியில் வந்து "செத்தேன் பிழைத்தே” னென்று ஒட்டம் பிடித்து இரண்டு நிமிஷங்களில் தாசில்தார் வீட்டிற்குள் நுழைந்து அவருக்கெதிரில் வந்து நின்றான்.

தாசில் :- ஏனடா சொன்னா யா ?

சேவ :- சொல்லிட்டேன்.

தாசில் :- என்ன சொன்னார்?

சேவ:- ஒண்ணும் சொல்லல்லீங்க, சரிதான் போன்னாங்க; வந்துட்டேன்.

தாசில் :- சேவகப் பக்கிரி எங்கே?

சேவ :- டிப்டி கலெக்டரு ஊட்டு வாசல்லே ரெங்கராசுக்கிட்ட ஒக்காரவச்சிட்டு வந்திருக்கிறேன்.

தாசில் :- சரி; அவன் வந்தவுடன் உள்ளே அழைத்துவா, எங்கேயும் போய்விடாதே - என்று சொல்லி அவனை வாசல் திண்ணைக்கு அனுப்பினார்.

மாலை ஆறுமணி சமயமானது; சேவகப் பக்கிரி புன்னகை செய்தவனாய் உள்ளே வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/241&oldid=1250919" இலிருந்து மீள்விக்கப்பட்டது