பக்கம்:மேனகா 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

மேனகா


தாசில் :- (புன்னகை செய்து கொண்டு) என்ன சங்கதி,

பக்கிரி :- டிப்டி கலெக்டரும், பெரியம்மாவும் போவப் போறாங்க, ரங்கராசு போவல்லே, டிக்கிட்டு வாங்கப் பணங்கொடுத்துட்டாங்க. அவன் 6.45 மணிக்கு ரயிலுக்குப் போயி டிக்கிட்டு வாங்கப் போறான். அவுங்க ரெண்டு பேரும் சரியா 7 மணிக்கு ரயிலுக்குப் போறாங்க.

தாசில் :- பட்டணத்து ரயில் சரியாக எத்தனை மணிக்குப் புறப்படுகிறது உனக்குத் தெரியுமா?

பக்கிரி :- ஏழு மணி இருவது நிமிஷத்துக்குப் பொறப்படுதாம்.

தாசில்:- சரி; நிநேராகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் புளுகு மாப்பிள்ளை வீட்டிற்குப் போய், நான் ராத்திரி எட்டு மணிக்கு அவர் வீட்டிற்கு வருகிறேனென்று சொல்லிவிட்டு வா- என்றார்.

அவன் “அப்படியே செய்யறென்” என்று சொல்லி விட்டு வெளியிற் போய்விட்டான். தாந்தோனிராயர் தம்மை உடனே நன்றாக அலங்கரித்துக் கொண்டு வெளிப்பட்டு பெரிய கலெக்டருடைய பங்களாவை அடைந்து வெளியிலிருந்த டபேதாரிடம் கலெக்டர் என்ன செய்கிறார் என்று கேட்டார். துரையும், துரைசானியும் வெளியில் உலாவப் புறப்படும் சமயம் என்றும், சாரட்டு தயாராக நிற்கிறதென்றும் கூறினான். துரை வண்டியில் ஏறு முன் அவரைக் கண்டு அவர் உலாவப்போவதை நிறுத்திவிட வேண்டுமென்று எண்ணங் கொண்டவராய் தாசில்தார் குடுகுடு வென்று உள்ளே ஓடினார். தாழ்வாரத்தில் ஏறிப் பதுங்கி ஒதுங்கி நின்றார்; துரையைக் கண்டவுடன் குனிந்து சலாம் செய்து புன்முறுவல் காட்டி, “மன்னிக்கவேண்டும்; உலாவப் போகும் சமயம் போலிருக்கிறது” என்றார்.

துரை அவரைக் கண்டவுடன் புன்னகை செய்து அன்பாக, “என்ன தாசில்தார்? என்ன சங்கதி? எதாவது அவசரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/242&oldid=1250920" இலிருந்து மீள்விக்கப்பட்டது