பக்கம்:மேனகா 1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மேனகா

கொடுக்கப்படும் இடத்திற்குப் போய், அவ்விடத்தில் நின்ற சேவக ரெங்கராஜுவைக் கண்டனர். இவர்களைக் கண்ட ரெங்கராஜா திடுக்கிட்டு நடுங்கி துரைக்கும், தாசில்தாருக்கும் குனிந்து சலாம் செய்தான். -

தாசில் :- எங்கடா வந்தாய்?

ரெங்க:- எசமான் ஊருக்கு போறாரு, டிக்கெட்டு வாங்க வந்தேன்.

தாசில்:- எந்த ஊருக்கு?

ரெங்க:- பட்டணத்துக்கு.

தாசில்:- யார் யார் போகிறார்கள்?

ரெங்க :- எசமானும் அவுங்க அம்மாவும்.

தாசில்:- என்ன விஷேசம்?

ரெங்க:- எசமானுடைய மகளுக்கு உடம்பு அசெளக்கியமாம், அதுக்காவ போறாங்க.

தாசில்:- பட்டணத்தில் எசமானுடைய மருமகப்பிள்ளை எந்தத் தெருவில் குடியிருக்கிறார்?

ரெங்க:- தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலே - என்றான்.

அப்போது துரை, “பட்டணத்துக்கு இப்போது எவ்வளவு ரூபா கட்டணம்?” என்றார்.

அந்தக் குறிப்பை அறிந்த தாந்தோனிராயர், “அடே! டிக்கெட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாய்? எங்கே டிக்கெட்டைக் கொடு” என்று கூறி, இரண்டு டிக்கெட்டு களையும் அவனிடமிருந்து வாங்கி துரையினிடத்தில் கொடுக்க, அவர் அவைகளில் பட்டணம் என்னும் பெயர் இருக்கிறதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/250&oldid=1250931" இலிருந்து மீள்விக்கப்பட்டது