பக்கம்:மேனகா 1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்டதும் பொய் விண்டதும் பொய்

241

உருக்கமும் காட்டி, “நூர்ஜஹான் என் தங்கமே! என்னைச் சோதித்தது போதும், காரியம் இப்படி விபரீதத்துக்கு வருமென்று முன்னமே ஒருவகையான சந்தேகம் உதித்தது. இதை நீ தப்பாக நினைத்துக்கொள்வாய் என்று எண்ணினேன்; அப்படியே செய்து விட்டாய். கோபிக்காமல் கொஞ்சமும் பொறுமை யோடு நடந்துகொள். நீ அருமையான உயர்ந்த குணமு டையவள் என்பதை இந்தச் சமயத்தில் நீ அவசியம் காட்டக் கடமைப்பட்டவள். இதிலேதான் உன்னுடைய மேன்மை இன்னமும் உயரப்போகிறது. ஒன்றையும் அறியாத அசட்டுப் பெண்களைப்போல , நீயும் இப்படி ஆத்திரம் அடைவதைக் காண என் மனம் வருந்துகிறது. உன்னுடைய உண்மைக் காதலை சோதனை செய்யவே இந்த நாடகத்தை நான் ஆடினேன். இது நிஜமான செய்கையல்ல. இதில் உன்னுடைய காதலின் பெருமையை உள்ளபடி அறிந்தேன். ஆனால், இதனால் உன்னுடைய உண்மைக் காதலை மாத்திரம் நான் அறிந்தேன் அன்றி உன் மீது எனக்குள்ள காதலை நீ சந்தேகிக்கும்படி செய்துகொண்டது மாத்திரம் ஒரு மூடத்தனம். நான் இப்படி விஷப்பரிட்சை செய்திருக்கக்கூடாது. என் காதலை உனக்கு நான் இன்னொரு முறை நான்றாக மெய்ப்பிக்கிறேன். அதுவரையில் பொறுமையோடு இரு; இப்போது பெருந்தன்மையோடு நடப்பாயானால், இதனால் உனக்கு ஒரு குறைவும் வராது. நாமிருவரும் இனி உயிரும் உடலுமென ஒன்று பட்டு வாழலாம்” என்று கூறி, அன்போடு அவளைக் கட்டி ஆலிங்கனம் செய்தான். குஷ்டநோய் கொண்டவரைக் கண்டு மனிதர் அருவருப்படைந்து அஞ்சி விலகுதலைப்போல, அவள் அவனது ஆலிங்கனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அப்பால் நழுவி, “என்ன இது மறந்துவிட்டீர்களா? கழுதையிலும் தாழ்ந்த மிருகமல்லவா! நான் தங்களைப் போன்ற மனிதப் பிறப்பினர் என்னைக் கையாலும் தொடலாமா! சே! இதென்ன கேவலம், இழிவான காரியம்! இந்த எருமை மாட்டை இனி பார்ப்பதே இல்லை யென்று இப்போதுதானே சொன்னீர்கள்! நீங்கள் மறந்தாலும்

மே.கா.I–17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/259&oldid=1251341" இலிருந்து மீள்விக்கப்பட்டது