பக்கம்:மேனகா 1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

247




16-வது அதிகாரம்

திரிசங்கு சொர்க்கம்

மேனகா காணாமற்போன தினத்திற்கு நான்காம்நாள் காலை ஏழுமணி சமயம், சாமாவையர், பெருந்தேவியம்மாள், கோமளம் ஆகிய மூவரும் வழக்கப்படி வராகசாமியின் வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்தனர். அதற்கு முதல்நாள் மாலையிலே தான் வராகசாமி மோட்டார் வண்டியின் கீழ் அகப்பட்டுக் கொண்டான் ஆகையால், அவர்களுடைய முகம் மிகவும் கவலையைத் தோற்றுவித்தது. பெருந்தேவியம்மாள் சாமாவையரைப் பார்த்து, “மேனகா போன விஷயத்தைப் பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் உன்னிடம் கேட்டார் என்றாயே! அவருக்கு இதை யார் சொல்லி இருப்பார்கள்? ஒரு வேளை மேனகா மரக்காயன் வீட்டிலிருந்து தப்பித்துக்கொண்டு தஞ்சாவூருக்குப் போயிருப்பாளோ? அங்கிருந்து அவளுடைய அப்பன் இந்த ஊர் போலீஸாருக்கு இதைப்பற்றி எழுதியிருப்பானோ? காரியம் அப்படி நடந்திருந்தால் நம்முடைய பாடு திண்டாட்டந்தான் என்றாள்.

உற்சாகமற்றவராய் இருந்த சாமாவையர், “நன்றாய்ச் சொன்னாய்! நீ மரக்காயன் வீட்டுக்குள் வந்து பார்த்திருந்தும் இந்தச் சந்தேகம் உனக்கேன்? அவன் மாளிகைக்குள் இரகசியமான அறைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் ஒரு அறைக்குள் மேனகாவை விட்டு பூட்டி யிருக்கிறானே! அவள் இனி வெளியில் வருவது எமலோ கத்துக்குப் போன உயிர் மீளுவதைப் போலத்தான். இந்த விஷயத்தில் மரக்காயன் மகா கெட்டிக்காரன் அல்லவா; அவனுக்குத் தெரியாத தந்திரமே இல்லை. அவன் வீட்டில் நானும், இன்னும் எத்தனையோ குமாஸ்தாக்களும், ஏராளமான வேலைக்காரர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/265&oldid=1252372" இலிருந்து மீள்விக்கப்பட்டது