பக்கம்:மேனகா 1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

மேனகா

பார்ப்பதா பானையைப் பார்ப்பதா? வராகசாமியின் பொருட்டு நீங்கள் இதை க்ஷமிக்க வேண்டும்; வாருங்கள் நம்முடைய அகத்துக்குப் போவோம். இன்னம் நீங்கள் காப்பிக்கூட சாப்பிடவில்லையே! முதலில் காப்பி கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பிறகு மேல் யோசனையைச் செய்வோம்” என்றார்.

அவருடைய சொற்கள் சாம்பசிவத்தின் செவிகளில் நுழையவில்லை. அவருடைய மனமும் தேகமும் கோபத் தாலும், ஆத்திரத்தாலும், அவமானத்தாலும், துயரத்தாலும் படபடத்தது. அதிவிசையில் சுற்றிக்கொண்டிருந்தும் அசைவற்றிருப்பது போலத் தோன்றும் பம்பரத்தைப் போல இருந்தன. உடம்பெல்லாம் வியர்வை ஒழுகியது; கண்கள் கலங்கின. தாம் ஒரு பெண்ணைப் பெற்றதனால் அவ்வாறு கேவலமாக நடத்தப்பட நேர்ந்ததல்லவா என்று சாம்பசிவம் நினைத்து உருகி ஒய்ந்து போனார். அதுகாறும் அத்தகைய பழிப்பைப் பெறாமல், எவ்விடத்திலும் பணிவையும் மரியாதையையும் பெற்றவராதலின், வெட்கமும், துக்கமும், அழுகையும் பொங்கியெழுந்தன; கண்களில் துளிந்த நீரைத் துடைத்துக் கொண்டார். இன்னமும் தாம் வந்த காரியம் முடியாமையால், அதற்குள் தாம் அவ்வாறு சோர்வடைதல் கூடாதென நினைத்தவராய், “சாமாவையரே! வண்டியில் ஏறும்; நேராக வைத்திய சாலைக்குப் போவோம்” என்றார். அவருடைய சொல்லின் உறுதியைக் கண்ட சாமாவையர், அதை மறுக்க மாட்டாதவராய் உடனே அதற்கிணங்கி வந்து வண்டியில் உட்கார்ந்து, இன்ன இடத்திற்குப் போக வேண்டுமென்று வண்டிக்காரனிடம் சொன்னார். அதற்குள் சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரும் ஏறி வண்டியில் உட்கார்ந்து கொண்டனர். அதிவேகமாய் ஒட்டும்படி சாம்பசிவம் கண்டித்து உத்தரவு செய்தார். வண்டி அப்படியே புறப்பட்டது. வண்டிக்கார சாயுபுவின் கைகளும், சாட்டை வாரும், சதங்கைகளும், வாயும் அதிகவேகமாய் வேலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/288&oldid=1251374" இலிருந்து மீள்விக்கப்பட்டது